Friday, April 30, 2010

சுறா.. எனது பார்வையில்..



எப்போவெல்லாம்.. மொக்கை தமிழ் படங்கள் அழிஞ்சி நல்ல தமிழ் படங்கள் வர ஆரம்பிக்குதோ.. அப்போல்லாம் நான் அவதரிப்பேன்..

___ சுறா விஜய் ____


நாங்க அஞ்சு பேரு எங்களுக்கு பயம் கிடையாது.. விமர்சனம் கூட படிக்காம இன்னிக்கு சுறா பார்க்க போனோம்..

டைடிலின்போது வரும் காட்சிகள் சூப்பர் ரகம்.. அதை பார்க்கும்போது கண்டிப்பா இது விஜயின் பழைய பட பாணியில் இருந்து சற்று வித்தியாசமாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் மாட்டுசானத்தை அடித்தது விஜயின் அறிமுகக்காட்சி.. சுறா போன்று அவர் டைவடித்து டைவடித்து வரும் காட்சியை பார்த்து அதுவரை ஆக்ரோசமாக கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணிக்கொண்டிருந்த விஜயின் 23 ரசிகர்களும் கப்சிப்.. தியேட்டரில் வெடிச்சிரிப்பு ஏற்படுத்திய காட்சியும் இதுவாகத்தானிருக்கும்..
கதை பெருசா இருக்க வேணாம்.. இங்க சிறுசா கூட இல்லிங்கோ.. விஜய் ஒரு மீனவ குப்பத்தில் இருக்கிறார்.. குப்பத்து மக்கள் குடிசை வீட்டை மண் வீடாக மாற்றிவிட்டுதான் திருமணம் என்று அடம்பிடிக்கிறார்.. இந்த லட்சிய பயணம் ஆரம்பிக்கும் முன்பே ஒரு பெண்ணை பார்த்து காதலிக்க ஆரம்பித்து விடுகிறார்.. ஒரு வேலை லட்சியம் முடியரப்போ பொண்ணு கிடைக்காதுன்ற பயமோ என்னவோ..
ஒரு சில பாடல் காட்சிகளில் .. அவரது நடன அசைவுகள் அட சொல்ல வைக்கிறது.. ஆக்சன் காட்சிகளில் அவரது வசன உச்சரிப்பு.. மாடுலேஷன்... முகபாவனை.. எல்லாம் இவரது பழைய படங்களில் இருப்பது போலவே இருப்பதால்.. நமக்கு உற்சாகத்தை விட சலிப்பையே தருகிறது..

இவர ஊரோட சர்தார்ஜி ரேஞ்சுக்கு கிண்டல் பண்ணிக்கொண்டிருக்கும்போது.. படத்தில் ஒரு காட்சியில் இவர் விஜய தி ராஜேந்தரை கலாயத்திருப்பது.. அடங்கொப்புரானே.. விஜய் கிண்டல் பண்ணி சிரிப்பதற்கும் ஒரு ஆள் இருப்பதை நினைத்து சந்தோஷம் வருகிறது..

பில்டப் வசனங்கள் விஜயின் மற்ற படங்களை விட இதில் ரொம்ப அதிகம்.. பட்.. அதற்காக ஒரு ஊரே இவர் பின்னால் எப்போ பார்த்தாலும் சும்மனாச்சுக்கும் போவதெல்லாம்.. ரொம்ப ஓவருங்கண்ணா..
ஒரு காட்சியில்.. விஜயை பார்த்து அந்த ஊரு கலெக்டர் சொல்லுவார்.. அவன பார்த்தீங்களா எப்போ வேணாலும் வெடிக்கிற எரிமலை மாதிரி இருக்கான்னு.. இது வெறும் சாம்பிள் தாங்க இது மாதிரி நிறைய இருக்கு படம் பூரா..

அப்புறம் அந்த ஊரில் இருக்கும் சிறியவர் பெரியவர் எல்லோரையும் இவர அவன் இவன் முட்டாப்பசங்களா.. என்று திட்டுவதெல்லாம்.. கொஞ்சம் ஓவர்தான்.. விஜய் அந்த ஊரு மக்களை பார்த்து கொஞ்சமாவது யோசிங்க என்பார்.. ( யோசிக்கிற அளவுக்கு அவங்களுக்கு அறிவு இருந்தா உங்க பின்னாடி ஏன் சார் வராங்க.. இத நீங்க யோசிங்க )

திரைக்கதையில் இருக்கும் சில ட்விஸ்ட் மசாலா பட பிரியர்களுக்கு கொஞ்சம் லாஜிக்கோடு குடுத்தமைக்காக இயக்குனரை பாராட்டலாம்..

சீக்கிரமே விஜய தமிழகத்துக்கு முதல்வர் ஆக்குங்க.. அதுக்கும் மேல ஆசைப்பட்டார்ணா.. தயவு செய்து பிரதமரா ஆக்குங்க.. மத்தபடி இவர் சினிமாவில் இருந்து தப்பிக்க நமக்கு வேற வழியே கிடையாது.. சொல்ல மறந்துட்டேன்.. அதுக்கு முன்ன அவர் அப்பாவ கவர்னர் ஆக்கிடுங்க..

தமிழன் ரெண்டு பேரு ஒரே இடத்துல இருந்தா ஒருத்தன் பேச்சை ஒருத்தன் கேட்க மாட்டான்.. இங்க ஒரு ஊரே இவரு பேச்சை கேக்குது..இது படத்துல இருக்கிற ஒரு மிகப்பெரிய டச்சிங் சீன்

கடைசி வரை இவர் மீன் பிடிக்க கடலுக்கு போகல.. ரெண்டு வாட்டி போவாரு..அது கூட தமன்னாவ பிடிக்க.. மீன் பிடிக்க இல்ல
ஆளில்லாத கடையில் டி ஆத்துற மாதிரி.. வலையை மட்டும் அடிக்கடி பின்னிட்டிருக்கிறார்..

ஹீரோயின் தமன்னாவை பற்றி.. அது வழக்கம்போல இந்த படத்துலயும் ஒரு அரலூசா வருது..

சுறா
.. " அவனல்லாம் அப்டியே போக விட்ரனும்.. ஏன்னா அவனுக்கு பயம் கிடையாது..

“”” BE CAREFUL...”” நான் என்னை சொன்னேன்....

Wednesday, April 28, 2010

அருகங்குளம் டப்பீஸ்

கிராமப்புறத்த மையமா வச்சி வர்ற எல்லா படத்துலயும் ஒரு கேரக்டர் எதுக்கு வருதுன்னே தெரியாத அளவுக்கு வந்துட்டு போகும்.. அது மாதிரிதான் இந்த டப்பீசும்..

இவனுக்கு அப்பா அம்மா வச்ச பேரு என்னன்னு யாருக்கும் தெரியாது.. எங்க ஊர்காரங்க வச்ச பேரு டப்பீஸ்.. எனக்கு சின்ன வயசா இருக்கும்போது, ரொம்ப வித்யாசமா இருக்கானேன்னு.. நான் எங்க அண்ணன்லாம்..இவன கல்லகொண்டு எரிஞ்சி விளையாடிருக்கோம்.. கல்லால் அடிக்கும்போது சுரணை இல்லாத மாதிரி இருந்தான்னா.. கிட்ட போயி அவன் கையில வச்சிருக்கிற கம்ப உருவி அவன அடிப்போம்.. எல்லார் வீட்டுலயும் சாப்பாடு வாங்கி சாப்பிடுற காரணத்தால் . அவன் எங்களோட சேட்டையை பொறுத்துதான் ஆகணும்..அவனுக்கு வலிக்குன்றதே எனக்கு பல வருசமா தெரியாது.. பெரியவங்கள்ள இருந்து சின்னவங்க வரை எல்லாரும் அவன வாடா போடான்னுதான் பேசுவாங்க.. ஒரே ஒரு காரணம். அவனுக்குன்னு வீடு, சொந்த பந்தம் எதுவும் கிடையாது...
வயல் வேலையில இருந்து வீட்டு வேலை வரை எல்லா வேலையும் வெறும் சாப்பாட்டுக்காக செய்வான்..வேலைக்கு கூலின்னா என்னன்னே தெரியாது அவனுக்கு..
எல்லாத்துக்கும் மேல எங்க ஊரு wireman கூட அவனுக்கு வேலை குடுத்தான்.. இருட்டுற சமயத்துல எல்லா மின் விளக்குகளுக்கும FUSE போடுற வேலை..அதே மாதிரி விடியற்காலையில FUSE எடுத்து விடனும்.. எல்லா வேலையும் தெரிஞ்ச உண்மையான உழைப்பாளி.. ஆனா அந்த ஊருக்கே இவன் கோமாளி..

சிந்திச்சி செயல்படல.. கேள்வி கேட்கலேன்னா.. நாம எல்லாருமே டப்பீஸ் மாதிரியான வாழ்க்கை வாழுரததான் அர்த்தம்..