Thursday, March 18, 2010

உரக்க சிரித்த நித்தி….

நேரம் இரவு 11 மணி

ரஞ்சிதா: என்ன பண்றது சுவாமி?

நித்தி: ஒன்னும் பண்ண வேண்டாம்.. ஒரு வீடியோவ மறைக்க நான் ஒம்போது வீடியோ அனுப்பிட்டு இருக்கேன். இது போதாதா..கொஞ்ச நாளுல எல்லாம் அடங்கிரும்.. அப்புறம் ஒரு நல்ல நாளா பார்த்து..நான் சந்நியாசி இல்ல.. சம்சாரின்னு சொல்லி ஒட்டு மொத்தமா எல்லாத்தையும் ஒரே அமுக்கா அமுக்கிடலாம்..

ரஞ்சிதா: எப்டி நம்ம விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது சுவாமி??. பின்னாடி பார்த்துக்கலாம்னு நீங்களே எடுத்தீங்களா??

நித்தி: அப்டிலாம்.. இல்ல கண்ணு.. காத்து வர்றதுக்காக லேசா கதவை திறந்து
வச்சேன்.. காத்தோட சேர்ந்து இந்த கொள்ளிக்கருப்பன் உள்ள நுழைஞ்சிருக்கான்.. அத கவனிக்காம..நான் சமாதி நிலைக்கு போயிட்டேன்.. இனி ரூம்ல fan , AC . எது ஒடலைனாலும் கதவு மட்டும் இல்ல ஜன்னல கூட திறக்க தொறக்கமாட்டேன்..

ரஞ்சிதா: இப்போ அந்த கொள்ளிக்கருப்பன என்ன பண்றது சுவாமி??..

நித்தி: நமக்கு கல்யாணம்னு அவனுக்கு தகவல் குடுத்தா மட்டும் போதும்.... குறைஞ்சது நாலைஞ்சி நாளைக்கு கவர் பண்ணுவான்.. வீடியோ செலவு மிச்சம்.. ( என்னா டெக்னிக்கா எடுக்கான்யா ! )நீயும்தான் தமிழ் சினிமால எவ்வளவோ ஹீரோ கூட ஆடி பாடுன.. என் கூட நடிச்சப்போ கிடைச்ச புப்ளிசிட்டி வேற எந்த படத்துலயாவது கிடைச்சிதா.. இல்ல இதுக்க்முன்ன எந்த நாயாவது உன் பேட்டிக்காக உன் வீட்டு வாசலுக்கு வந்துதா.. இப்போ பாரு உன் பொறவாசல்ல கூட ஆளுங்க நிக்காங்க உன் பேட்டிக்காக..

ரஞ்சிதா: உண்மைதான் சுவாமி.. உங்களுக்குதான் சாமி நன்றி சொல்லணும்..

நித்தி: அடி பயவுள்ள போற போக்க பார்த்தா மனோரமா இயர் புக் வரைக்கும் போய்டுவ போல..

ரஞ்சிதா: எப்டி சொல்றீங்க சுவாமி?

நித்தி: நித்தியானந்தவுடன் வீடியோவில் இருந்த நடிகை யாருன்னு ஒரு கேள்வி எழுப்பிரமாட்டாங்க...அப்போ மக்களோட பொது அறிவு வரைக்கும் போயிருவல்ல ..எஹீ..ஹா... ஹா.. ஹா.. ஹா..

ரஞ்சிதா: உரக்க சிரிக்காதீர்கள் சுவாமி.. வாயில கேமரா வச்சிர போறாங்க………

(உரையாடல் தொடரும்... )

Thursday, March 11, 2010

மழை நேர மாலை பொழுது

மெலிதாய் சாரல்
குடைக்குள்
இருந்தும்
ஈரமாகும் மேனி..
முழுதாய் நனையலாம்
வேண்டாம் இன்னொரு
குடை....

நிசப்த இருளில்
நிழலாய் நீ
எதிரில் நான்...

அடை மழை
நிழற்குடையில்
நீ
மட்டும்
தனியாய்..

தொலைதூரமாய்
ஒரு இரவுப்பயணம்
ஓட்டுனராய் நான்..
சமமாய் நீ
உனக்கான
முன்னிருக்கையில்
உறங்கா விழியுடன்..

ரசனையாய் ஒரு கவிதை
இல்லை இல்லை

என் ரசனையே
கவிதையாய்..

தொடரும்
இல்லை
முற்றுப்பெறும்
பின்னூட்டத்தை பொறுத்து……

Tuesday, March 9, 2010

முதல் பாவம்..

அம்பாசமுத்திரம்..

எனக்கு அப்போ 11 வயசு இருக்கும்.. ஸ்கூல் முடிச்சி நேரா எங்க அப்பாவோட கடைக்குதான் போவேன்.. வேற எதுக்கு..சாக்லேட், பிஸ்கட் சாப்ட்றதுக்குதான்.. 11 வயசுல நான் என்ன கடைய நிர்வாகமா பண்ண முடியும் .. எங்க அண்ணனும் அப்போ கடையில ப்ரெசென்ட்.. கொஞ்ச நேரம் கழிச்சி நைசா என்கிட்டே சொன்னான்.. சத்தம் போடாம கிளம்பு.. நாம ஒரு முக்கியமான ஒருத்தர பார்க்க போறோம்..சின்ன வயசு..எத எடுத்தாலும் ஆர்வம்.. யோசிக்காம கிளம்பினேன்..நடந் போயிட்டே இருக்கும்போது சொன்னான்.. இன்னிக்கு வீட்டுக்கு நைட் லேட் ஆதான் போக முடியும்நு இன்னொரு பீடிகை போட்டான்.. எனக்கு ஒன்னும் புரியல..ஏதோ ஒரு நினைப்புல.. அவன்கூட நடந்திட்டு இருந்தேன்..

கொஞ்ச நேரம் கழிச்சி பார்த்தா.. ஒரு நூறு பேருக்கு மேல ஒரு மேடை பக்கம் கூட்டமா நிக்குறாங்க.. ஏதோ கட்சி மீட்டிங்.. எங்க அண்ணன் அதுக்கு மேல நடக்கல..அங்கேயே நின்னுட்டு இருந்தான்.. என்னடா இவன் முக்கியமான ஆள்னு சொல்லிட்டு.. இங்க வந்து நிக்கிறான்.. ஒரு வேலை அப்பா அந்த பக்கமா வந்து பயந்து நிக்குரான்னு நினைச்சி சுத்தி பார்த்தா யாரும் இல்ல..

ஒன்னு முக்கியமான ஆள காட்டு.. இல்லைனா வீட்டுக்கு கிளம்புறேன்.. அதே நேரம் மேடையில் இருந்து அறிவிப்பு..

பிரபல தமிழ் நடிகர் ராமராஜன் அவர்கள் இன்னும் 20 தே நிமிடத்தில் உங்கள் முன் தோன்றுவார்னு.. எனக்கு புரிஞ்சிரிச்சி.. அந்த நேரம் ராமராஜன் கிட்ட தட்ட அறிவிக்கப்படாத சூப்பர் ஸ்டாரா தமிழ் சினிமாவுல வலம் வந்த நேரம்.. எனக்கும் சந்தோஷம்.. அவங்க சொல்லி ஒரு 45 நிமிஷம் கழிச்சி. மேடையில் ராமராஜன்..

பார்த்திட்டேன்.. பார்த்திட்டேன்..

இவர்தாங்க நான் நேரில் பார்த்த முதல் சினிமா கதாநாயகன்.. எவ்வளவோ வளர்பிறை நடிகர் தமிழ் ல இன்னும் நடிச்சிட்டு இருக்க..நான் ஏன் இவர முதல் முதலா நேர்ல பார்க்கணும்..

தலைப்ப மறுபடி படிங்க..

என் வாழ்க்கை நல்லா போயிட்டிருக்கும்போதே திடீர்னு சறுக்கல் ஏற்பட்டா எனக்கு இந்த நிகழ்ச்சி தான் ஞாபகத்துக்கு வரும்..

Thursday, March 4, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா- எனது பார்வையில்..

விண்ணைத்தாண்டி வருவாயா...தலைப்பை பார்த்து..
காதலை தெளிப்பார்கள் என்று எதிர்பார்த்தால் ..பாட்டிலோடு கவிழ்த்திருக்கிறார்கள்....

எனக்கு சுத்தமாய் பிடிக்காத ஹீரோ.. ஒரு முறை கூட ரசிக்காத நடிகை .. ஓரளவு பிடித்த இயக்குனர்.. இவர்கள் மூவரையுமே.. பின்னுக்கு தள்ளியது..

முழுமையான வலியை உள்ளடக்கி எதார்த்தமாய் விண்ணைதாண்டும் ஒரு சத்தியமான காதல் கதை..

ஒரு காதலனின்..காதலியின்.. மனதை..உணர்வை..அவர்கள் பேசும் வசனங்களின் மூலம்..முழு நேர்மையுடன் சொல்லியமைக்கு.. இயக்குனருக்கு போடலாம் ஒரு சலாம்...

எத்தனையோ காதல் கதை.. தமிழ் சினிமா காட்டியிருக்கிறது..அதில் நமக்கு பிடித்த படங்கள் ஏராளம்.. இந்த படத்தை உயர்த்த அதை குறைத்து மதிப்பிட விரும்பவில்லை...

இந்த படத்தின் காதலில் சினிமாத்தனம் ௦ஜீரோ சதவிகிதம்..

முதல் காதலை சுவாசிப்பவர்கள் இந்த படம் மூலம் மற்றுமோர் முறை..இறந்த காலத்தின் ஒவ்வோர் மணித்துளிகளையும்..உணரலாம்..


BETTER WATCH IT



..யாரோ..

" பைப்பை திற.. தண்ணி வரட்டும் " - துண்டு சித்தர்..

நல்ல உயரம்.. வெள்ளை நிறம்.. ஊருக்கு மட்டும் உபதேசம்.. ஒரு வேலை சாப்பாடு.. வாரம் தவறாமல் கோவிலுக்கு போவதுண்டு.. கார்த்திகை அமாவாசை.. மற்றும் எந்த விரத நாட்களையும் விடுவதில்லை.. மாமிசம் சாப்பிடுவதற்கென்று சில நாட்கள்.. மொத்தத்தில்..விரத வாழ்க்கையில் இவரை மிஞ்ச ஆள் இல்லை.. இத்தனைக்கும் நடுவில் அலுவலகம் சென்று.. கணக்கு உத்தியோகம் பார்க்கிறார்.. மிக சாதாரணமாக இருந்த இவர் " துண்டு சித்தர் " என்று அழைக்க பட்டது மிக சமீப காலங்களாகத்தான்..

என்னதான் நல்ல உயரமா இருந்தாலும்..நல்ல சம்பாத்தியம் இருந்தாலும்.. அறைக்குள் இருக்கும்போது.. இவர் உடை என்னவோ 1 ஜான் துண்டுதான்.. சித்தர போன்ற வாழ்க்கை வாழும் இவருடைய உடை வெறும் துண்டாக இருந்ததால்.. துண்டை சித்தரோடு இணைத்து ..துண்டு சித்தர் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார்..

இவர் கூறும் வாழ்க்கை தத்துவம் ஏராளம்.. இவர் நேரம் போகாமல் கிறுக்கிய " பைப்பை திற.. தண்ணி வரட்டும் " நாவல்.. இன்னும் ஓரிரு மாதங்களில் குமுதம் போன்ற உயரிய வார இதழ்களில் பிரசுரமாகும்.. வாசகர்கள் விரும்பி வாங்கி படிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

-- யாரோ --