Sunday, January 24, 2010

VEER - REVIEW

மூன்று முட்டாள்கள்-அ பார்க்க நாலு பேர் போனோம்.. அதனால்தானோ என்னமோ டிக்கெட் கிடைக்கல.. வேற வலி இல்லாம.. நேத்து ரிலீஸ் ஆன.. ஆனால் பார்க்க ஆள் இல்லாத " வீர் " படத்துக்கு போனோம்..

கதை தெரியாம படம் பார்த்தாதான் ஒரு த்ரில் என்ற என் எண்ணத்துல கிலோ கணக்குல புல்டோசெர் அ விட்டு ஏத்திட்டாங்க..கொஞ்ச நாளா என் டைம் சரி இல்லைன்னு நினைக்கிறேன்.. இல்லைனா இந்த படத்த தியேட்டர் - ல பார்ப்பேனா..

சல்மான் என்ற உடனே நினைவுக்கு வருவது..ஆங்.. கண்டுபிடிசிருப்பீங்க.. இருந்தாலும் சொல்றேன்..சின்ன வயசு ல மேல் சட்டை இல்லாம கஷ்டப்பட்டிருப்பாருன்னு நினைக்கிறேன்.. அந்த பாதிப்பு இந்த படம் வரை இருக்கு..படம் முழுவதிலும் இருக்கு..

ஹீரோயின் காத்ரீனா கைப் நு தான் இன்னிக்கு காலை வரை நினைச்சிட்டு இருந்தேன்..இன்னிக்குதான் தெரியும் காத்ரீனா கைப் மாதிரியே ஆச்சு அசலாக இருக்கும் இன்னொரு பெண் என்று.. ..

நல்ல வேலை இந்த பொண்ணு காத்ரீனா கைப் மாதிரி பிறந்திசசி.. இதுக்கு பதிலா பிரபாகரன் மாதிரி பிறந்திச்சின்னா... இந்நேரம் நம்ம ஆளுங்க இத பார்சல் பண்ணி ஸ்ரீலங்கா அனுப்பி இருப்பாங்க.. முட்டாள் சிங்கள அரசும்... இவரையும் கொன்னு.. இந்த உடம்ப உலகத்துக்கு காமிச்சி.. ரெண்டு பிரபாகரன கொன்னுட்டோம்னு மார் தட்டி இருப்பாங்க..

சல்மான் கானிடம் ஒரு கேள்வி.. ஐஸ்வர்யா ராய் மாதிரியே ஒரு பொண்ண கண்டுபிடிச்சீங்க.. இப்போ காத்ரீனா கைப் மாதிரி.. இந்த நேரத்த நல்ல கதைய கண்டுபிடிக்க செலவு பண்ணலாமே...

என்னடா இதுவரை படத்தோட கதைய பத்தி விமர்சனம் பண்ணலன்னு கேக்குறீங்களா..என்ன நக்கலா... அந்த கதைன்ற கருமம் இருக்கா இல்லையான்னு நான் யோசிக்கிறதுக்குள்ள..படத்த முடிச்சிட்டான்கன்ற கொலை வெறி இல இருக்கேன்.. நீங்க வேற..