Thursday, October 14, 2010

அய்யனார் vs பாட்ஷா -2

1984 ம ஆண்டு ..சினிமாவை பற்றி அறியாத வயதிலேயே.. என்னை ஈர்த்த அய்யனார் காபி விளம்பரத்துக்காக அம்பாசமுத்திரம் பூக்கடை சந்தில் வரையப்பட்ட ரஜினிப்படம்.. பின்னர் அம்பை கிருஷ்ணா திரையரங்கில் நான் பார்த்த நான் சிகப்பு மனிதன் திரைப்படம்.. அன்றைய நாட்களில் ஏதோ ஒரு விளம்பரத்தில் " காதலின் தீபம் ஒன்று " பாடலில் ரஜினியை அடிக்கடி காண்பிப்பார்கள்.. ரஜினியின் முகம் மிகப்பரிட்சயமாயிற்று… என்னை பொறுத்த மட்டில் ரஜினி சாயலில் இருக்கும் நளினிகாந்த கூட திரையில் அடி வாங்கக்கூடாது.. கடைசியாக நான் அம்பை மண்ணில் நண்பர்களோடு சென்று பார்த்த திரைப்படம் தர்மதுரை ( பதிவர் எறும்பு உள்பட ).. அடிப்படையில் ரஜினியை ரசித்து பின்னர் டீசன்ட் கும்பலில் சேர்வதற்காக ரஜினியை விமர்சித்து தன்னையும் ஒரு டீசென்ட் கும்பலில் இணைத்துக்கொண்டவர்களில் இவரும் ஒருவர்..ஒரு சில காரணங்களுக்காக.. இடம் மாறினாலும்.. ரஜினி என்ற ஒற்றை விஷயம் மட்டும் என்னோடு தொடர்ந்து வந்தது..எங்கு சென்றாலும் என் நண்பர்களை, உறவினர்களை பார்க்கும் சந்தோஷம் கிடைக்காவிட்டாலும்.. ரஜினி படம் பார்க்கும் சந்தோசம் மட்டும் நிலையாக இருந்தது .. எனது இத்தனை வயதில்.. ரஜினியை பற்றி மகா கேவலமாக விமர்சிப்பவர்களை பார்த்திருக்கிறேன்.. ஜாதி உணர்வால் புதியதாய் முளைத்த ஒரு நடிகனுக்கு கொடி பிடித்துக்கொண்டு ரஜினியை தாழ்த்தி பேசியவர்கள் அதிகம்.. இன்னும் ஒரு சிலர் கிழிந்த லுங்கியை அண்ட்ராயர் இல்லாமல் ஏற்றிக்கொண்டு சொன்ன விமர்சனம் (டீசண்டானவன் எவனும் ரஜினியை ரசிக்க மாட்டான் ) எனக்குள் இன்றும் நிழலாடும்.. ஒ அப்டியாண்ணன்.... என்று நான் அந்த டீசன்டானவர் இருக்கும் இடத்தை விட்டு நகன்றிருக்கிறேன்..
இவர்களின் தரம் தாழ்ந்த விமர்சனம் ஒரு போதும் எனக்கு ரஜினியின் மேல் உள்ள மதிப்பை குறைக்கவில்லை.. மாறாக.. அப்படி விமர்சிப்பவர்கள் மீதான மரியாதைதான் குறைந்தது.. இதை அந்த அறிவு ஜீவி விமர்சகர்கள் ஒரு போதும் உணரப்போவதில்லை.. . எனக்கு தெரிந்து அடிப்படை கமல் ரசிகர்கள் ஒருபோதும் ரஜினியை கீழ்த்தரமாய் வசை பாடியதில்லை..
இதோ இந்தியாவின் அத்தனை நடிகர்களையும் பின்னுக்கு தள்ளி என் தலைவன் மட்டுமே முன்னுக்கு செல்கிறான்.. அவமானங்களையும் வசவுகளையும், தூற்றல்கள் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு முன்னேற்றத்தை நோக்கி பயணப்படுவது ரஜினி என்ற மனிதனால் மட்டுமே சாத்தியப்படுத்த முடிகிறது..

சினிமா உலகில் இடம் தெரியாமல்.. தடம் இல்லாமல் தொலைந்து போனவர்களை எல்லாம் ரஜினியோடு ஒப்பிட்டு பேசி இருக்கிறார்கள்...
காலம் மாறிக்கொண்டிருக்கிறது.. மாறாது ஒரு விஷயம்.. ரஜினியின் மவுசு மட்டும்தான்.. இன்றும் ரஜினியை தாழ்த்தி கேவலமாக விமர்சனம் எழுதிக்கொண்டிரிக்கிரார்கள்.. எந்த நடிகரையும் தயவு செய்து ரஜினியோடு ஒப்பிட்டு அந்த நடிகரை சினிமா உலகில் நீர்த்து போகசெய்துவிடாதீர்கள்.. அவர்களும் முன்னேற வேண்டும்..

ரஜினி படங்களை ரஜினிக்காக பார்க்கிறேன்....மற்ற படங்களை சினிமாவாக பார்க்கிறேன்.. அதனால்தானோ என்னவோ என்னால் எந்த வித ஒப்பிடலும் இல்லாமல் எல்லா நடிகர்களையும் ரசிக்க முடிகிறது.. எல்லா நல்ல படங்களையும் மனதார பாராட்ட முடிகிறது தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி ..ரசிகன் ரஜினிக்கு மட்டும்.. மற்றபடி கதை, சினிமா எல்லாம் என் பொழுதுபோக்கிற்காக....
புது இடம், புதிய நண்பர்கள் என்று புதியதாய் நிறைய விஷயங்கள் மாறிக்கொண்டே வந்திருக்கிறது.. மாறாத ஒரே விஷயம் அன்று முதல் ( அய்யனார் காப்பி விளம்பர படத்திலிருந்து ) இன்று வரை என்னை வசீகரிக்கும் ரஜினியின் பாட்ஷா – 2 ரிலீசுக்கு முந்திய அட்டைப்படம் வரை ..
…ரஜினி ரஜினி ரஜினி மட்டுமே