Thursday, September 30, 2010

எந்திரன்... என் முதல் பார்வையில்..

எந்த வித ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஆரம்பிக்கும் இந்த படத்தின் அறிமுக காட்சி.. கண்டிப்பாய் ரஜினி ரசிகர்களுக்கானதில்லை.. படத்தின் பெயர் ஆரம்பிக்கும்போதே ரோபோவின் உருவாக்கம் என்று படம் பயணிக்கும் திசையே வேறு... இத்தனை ஆண்டு கால தமிழ் சினிமா வரலாற்றில் திரையரங்கு வாசலில் சூடன் கொளுத்தி, பூசணிக்காய் உடைத்து, பாலபிசேகம் பண்ணிவிட்டு, ஆர்ப்பாட்டத்தோடு, பரபரப்பான ஆர்ப்பரிப்போடு திரையரங்கினுள் நுழையும் ரசிகர்களுக்கு முதன் முறையாக அவர்களின் எதிர்பார்ப்பையும் மீறி..ஒரு இயக்குனரின் கனவை நிறைவேற்றுவதற்க்காக எந்த வித நிர்பந்தமும் இன்றி ரஜினி.. வேறு பாதையில்.. மூன்று முகங்களில்.. விஞ்ஞானி, சிட்டி ரோபோ..வில்லன் ரோபோ..

ஆரம்பம்தான் அப்படி... போக போக சிட்டி ரோபோவின் களேபரங்களில் திரையரங்கில் அனைத்து தரப்பு ரசிகர்களிடம் இருந்து வரும் கரவொலிகள அடங்க வெகு நேரம் பிடிக்கிறது..இந்த படம் முழுவதும் வியாபித்திருக்கும்.. காட்சி.. காட்சி அமைப்பு.. கதாப்பாத்திரம்.. அத்தனையும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கண்டிப்பாய் முற்றிலும் புதியது...

என்னவோ தெரியல.. ஒரு குழந்தையை போல்.. சொன்ன வேலையை செய்து கொண்டு.. சுத்தமாய் பொய் சொல்லியே பழகாத..எதார்த்தமாய் பதில் சொல்லும் சிட்டி ரஜினி மனதில் அப்படியே பதிந்து போகிறார்.. இன்னும் சில நேரம் இந்த சிட்டி ரோபோவுக்கான காட்சிகள் நீண்டிருக்க கூடாதா என்று ஏங்காத மனங்கள் ஒரு சில மட்டுமே இருக்கக்கூடும்

தன் படைப்பான சிட்டி ரோபோ பதில் சொல்லும் அழகை பார்த்து மெய்சிலிர்ப்பது.. அது செய்யும் அசகாய சாகசங்களை மிகுந்த உற்சாகத்தோடு மீடியா முன் பகிர்ந்து கொள்ளும்போது..இதே சிட்டியின் தவறை கண்டு சீறும்போது, இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.. விஞ்ஞானி ரஜினி அவ்வளவு நேர்த்தி..

என்னை பொறுத்த மட்டில் இந்த எந்திரன் இயக்குனர் ஷங்கரின் புது முயற்சி..

எனக்குள் இருக்கும் சினிமா ரசிகனுக்கு இந்த புதிய மனிதனின் வரவு ஒரு பொக்கிஷம்..

புதிய மனிதா ..

MY HEARTY WELCOME TO YOU..