Wednesday, April 28, 2010

அருகங்குளம் டப்பீஸ்

கிராமப்புறத்த மையமா வச்சி வர்ற எல்லா படத்துலயும் ஒரு கேரக்டர் எதுக்கு வருதுன்னே தெரியாத அளவுக்கு வந்துட்டு போகும்.. அது மாதிரிதான் இந்த டப்பீசும்..

இவனுக்கு அப்பா அம்மா வச்ச பேரு என்னன்னு யாருக்கும் தெரியாது.. எங்க ஊர்காரங்க வச்ச பேரு டப்பீஸ்.. எனக்கு சின்ன வயசா இருக்கும்போது, ரொம்ப வித்யாசமா இருக்கானேன்னு.. நான் எங்க அண்ணன்லாம்..இவன கல்லகொண்டு எரிஞ்சி விளையாடிருக்கோம்.. கல்லால் அடிக்கும்போது சுரணை இல்லாத மாதிரி இருந்தான்னா.. கிட்ட போயி அவன் கையில வச்சிருக்கிற கம்ப உருவி அவன அடிப்போம்.. எல்லார் வீட்டுலயும் சாப்பாடு வாங்கி சாப்பிடுற காரணத்தால் . அவன் எங்களோட சேட்டையை பொறுத்துதான் ஆகணும்..அவனுக்கு வலிக்குன்றதே எனக்கு பல வருசமா தெரியாது.. பெரியவங்கள்ள இருந்து சின்னவங்க வரை எல்லாரும் அவன வாடா போடான்னுதான் பேசுவாங்க.. ஒரே ஒரு காரணம். அவனுக்குன்னு வீடு, சொந்த பந்தம் எதுவும் கிடையாது...
வயல் வேலையில இருந்து வீட்டு வேலை வரை எல்லா வேலையும் வெறும் சாப்பாட்டுக்காக செய்வான்..வேலைக்கு கூலின்னா என்னன்னே தெரியாது அவனுக்கு..
எல்லாத்துக்கும் மேல எங்க ஊரு wireman கூட அவனுக்கு வேலை குடுத்தான்.. இருட்டுற சமயத்துல எல்லா மின் விளக்குகளுக்கும FUSE போடுற வேலை..அதே மாதிரி விடியற்காலையில FUSE எடுத்து விடனும்.. எல்லா வேலையும் தெரிஞ்ச உண்மையான உழைப்பாளி.. ஆனா அந்த ஊருக்கே இவன் கோமாளி..

சிந்திச்சி செயல்படல.. கேள்வி கேட்கலேன்னா.. நாம எல்லாருமே டப்பீஸ் மாதிரியான வாழ்க்கை வாழுரததான் அர்த்தம்..