Monday, January 18, 2010

ஆயிரத்தில ஒருவன் - சின்னத்திரை விமர்சனம்..

ஆயிரத்தில ஒருவன் பார்த்தேன்.. எங்க எப்டி நு மட்டும் கேட்காதீங்க..செல்வராகவன் படம் மேல எனக்கு பெருசா அப்டி ஒண்ணும் எதிர்பார்ப்பு கிடையாது.. எல்லாரும் ரொம்ப எதிர்பார்ப்பா இருக்காங்களேன்னு.. எனக்குள்ளேயும் படம் பார்க்கனும்னு ஆசை வந்து பார்த்தது..டைட்டானிக் பட ஸ்டைல் ல ஆரம்பிச்சி.. ஒவ்வொரு காட்சியமைப்பும் தமிழுக்கு ரொம்ப புதுசாவே பட்டுச்சி.. ச்சே. கிளப்பலா கொண்டு போயிருக்காம்பா நு நினைச்சி முடியல.. அந்த இண்டர்வல் சீன்.. ரீமா.. கார்த்தி.. ஆண்ட்ரியா.. மூணு பேருமே ஏதோ டி ராகுலா கடிச்ச மாதிரி அங்குட்டும் இங்குட்டும் ஓடுறாங்க.. சுடுறாங்க.. மொத்தத்துல வெறிக்கடிய ரொம்ப வே என்ஜாய் பண்றாங்க.. இந்த இடத்துல செல்வராகவன் எண்ட மட்டும் ஏதோ சொல்ல வர்ற மாதிரி ஒரு பீலிங்.. இது வரை இந்த படத்த பத்தி தாறு மாறா விமர்சனம் பண்ணிவங்க மேல கோபம் வந்தது.. இப்போ அந்த கோபம் அப்டியே என் நினைப்பு மேல... அதுக்கப்புறம் அந்த சோழ அரசர்களோட தற்போதய வாழ்க்கை, அவங்க பேச்சு வழக்குகள்.. ரீமா வோட வெறி.. அப்டி இப்டி நு கொஞ்ச நேரம் எனக்கு புரியாத பாஷையில பேசிட்டு இருந்ததால.. கொஞ்ச நேரம் இந்திய பங்களாதேஷ் கு இடையிலான டெஸ்ட் மேட்ச் எ ரசிக்க ஆரம்பிச்சிட்டேன்.. மறுபடி அந்த அடிமைகளை ரவுண்டு கட்டி கொல்ற சீன்... லேசா குலை நடுங்குற மாதிரிதான்...அந்த நல்ல சீன் ல எதுக்கு இந்த கோமாளி பிரதாப் பொத்தான் எ உள்ள விட்டாங்களோ.. முதல்ல அவன் மண்டையில அந்த இரும்பு குண்ட வீசுன்னு நான் மனசார சொல்ற அளவுக்கு அவர் நடிப்பு ப்ராமதம்.. எனக்கு இந்த சோழ அரசர் மேல பரிதாபமோ.. இல்ல இந்த பாண்டிய வம்சத்து மேல வெறுப்போ அந்த கடைசி கட்ட போர் நடக்க ஆரம்பிச்சும் வரல.. அந்த போர் முடிஞ்சி பாண்டிய வம்சம் ஜெயிச்ச பின்னாடி.. ஏதோ ஒரு விஷயம் நெருட ஆரம்பிச்சிது.. சிறை பிடிக்கப்பட்ட பெண்கள்ட அந்த அதிரடிப்படையினர் காம வேட்டயாடுற காட்சி... இதே மாதிரி தானே நம் தமிழ் சகோதரிகளுக்கும் இலங்கையில நடந்திருககும்னு தோணிச்சி...மனசு ரொம்ப வலிச்சுது.. போர் கைதிகள நடத்துறதுல ஒரு அடிப்படை தர்மம் கூட.. அதுவும் இந்த காலத்தில் இல்லாம போயிருக்கின்ற வருத்தம் வந்தது..படம் முடியப்போற டைம் ல என்னை மறுபடியும் கதைக்குள்ள செல்வராகவன் இழுத்தது மறுக்க முடியாத உண்மை.. படத்தோட ஆரம்பத்தில சோழ இளவரசர் படை பரிவாரங்களோட தப்பிக்கிறார்.. முடிவுல ஒரு தனி மனிதன்.. தற்போதய இளவரசியோடு தப்பிக்கிறார்.. இவர்தான் அந்த ஆயிரம் சோழர் மக்களில் ஒருவன்..
கடைசியா.. செல்வராகவன் எ பத்தி நினைக்கும்போது.. ஒரு லைன் தான் ஞாபகத்துக்கு வருது... " இவனுககுல்ளையும் ஏதோ ஒன்னு இருந்திருக்கு பாரேன் "
என்னோட முதல் பதிவு.. சோ பாத்து பவுசா.. விமர்சனம் பண்ண கேட்டுக்கொள்கிறேன்..

7 comments:

malthi said...

very first comment kudukkarathula romba santhosam...

really nice.. 2 b frank.. not bad... sirichitte read panrappo.. Eela sahotharihal pathi sentiment dialogues... thavirthirukkalam nu thonichu... anyway gud try.. keep it up my friend... :-)

தினேஷ் said...

Good Job Ram.
decent review on Aayirathil Oruvan. Aana antha Prathap Bouthan than romba paavam......Neenga ippadi solli irukka koodathu...
Other than that every thing is good.That too...........
"இவனுககுல்ளையும் ஏதோ ஒன்னு இருந்திருக்கு பாரேன் ".....ingan nikkireenga neenga Mr.Ram !!!!!!!!!

- Dinesh

எறும்பு said...

Good... add your post to tamilish.com and tamilmanam.net

எறும்பு said...

also remove the CAPTCHA (word verification setting from comment moderation). If word verifcation is there,some person will not comment

பஹ்ரைன் பாபா said...

"" January 19, 2010 7:40 AM
எறும்பு said...
Good... add your post to tamilish.com and tamilmanam.net

January 19, 2010 7:51 PM
எறும்பு said...
also remove the CAPTCHA (word verification setting from comment moderation). If word verifcation is there,some person will not comment ""

Welcome Kanna and Thanks for your good suggestion. I have removed the word verification setting. I shall add my post to the link provided by you. More suggestions are welcome from you

பஹ்ரைன் பாபா said...

Welcome Dinesh and Malti.. Thank you for your genuine comments.

R.Gopi said...

ஆயிரத்தில் ஒருவன் விமர்சனம், அதுவும் சுடச்சுட என்றவுடன், எம்.ஜி.ஆர். நடித்த “ஆயிரத்தில் ஒருவன்” பற்றி ஏதும் எழுதி இருப்பீர்களோ என்று ஆவலாக வந்தேன்...

என்னை ஏமாற்றி விட்டீர்களே ராம்...

எனிவே... இந்த ஆயிரத்தில் ஒருவன் விமர்சனமும் நன்றாக தான் இருந்தது.... எழுத்து பிழை ரொம்ப அதிகம் “தல”... கொஞ்சம் பார்த்துக்கோங்க....

அடுத்து “குட்டி” விமர்சனம் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...

Post a Comment