Thursday, October 14, 2010

அய்யனார் vs பாட்ஷா -2

1984 ம ஆண்டு ..சினிமாவை பற்றி அறியாத வயதிலேயே.. என்னை ஈர்த்த அய்யனார் காபி விளம்பரத்துக்காக அம்பாசமுத்திரம் பூக்கடை சந்தில் வரையப்பட்ட ரஜினிப்படம்.. பின்னர் அம்பை கிருஷ்ணா திரையரங்கில் நான் பார்த்த நான் சிகப்பு மனிதன் திரைப்படம்.. அன்றைய நாட்களில் ஏதோ ஒரு விளம்பரத்தில் " காதலின் தீபம் ஒன்று " பாடலில் ரஜினியை அடிக்கடி காண்பிப்பார்கள்.. ரஜினியின் முகம் மிகப்பரிட்சயமாயிற்று… என்னை பொறுத்த மட்டில் ரஜினி சாயலில் இருக்கும் நளினிகாந்த கூட திரையில் அடி வாங்கக்கூடாது.. கடைசியாக நான் அம்பை மண்ணில் நண்பர்களோடு சென்று பார்த்த திரைப்படம் தர்மதுரை ( பதிவர் எறும்பு உள்பட ).. அடிப்படையில் ரஜினியை ரசித்து பின்னர் டீசன்ட் கும்பலில் சேர்வதற்காக ரஜினியை விமர்சித்து தன்னையும் ஒரு டீசென்ட் கும்பலில் இணைத்துக்கொண்டவர்களில் இவரும் ஒருவர்..ஒரு சில காரணங்களுக்காக.. இடம் மாறினாலும்.. ரஜினி என்ற ஒற்றை விஷயம் மட்டும் என்னோடு தொடர்ந்து வந்தது..எங்கு சென்றாலும் என் நண்பர்களை, உறவினர்களை பார்க்கும் சந்தோஷம் கிடைக்காவிட்டாலும்.. ரஜினி படம் பார்க்கும் சந்தோசம் மட்டும் நிலையாக இருந்தது .. எனது இத்தனை வயதில்.. ரஜினியை பற்றி மகா கேவலமாக விமர்சிப்பவர்களை பார்த்திருக்கிறேன்.. ஜாதி உணர்வால் புதியதாய் முளைத்த ஒரு நடிகனுக்கு கொடி பிடித்துக்கொண்டு ரஜினியை தாழ்த்தி பேசியவர்கள் அதிகம்.. இன்னும் ஒரு சிலர் கிழிந்த லுங்கியை அண்ட்ராயர் இல்லாமல் ஏற்றிக்கொண்டு சொன்ன விமர்சனம் (டீசண்டானவன் எவனும் ரஜினியை ரசிக்க மாட்டான் ) எனக்குள் இன்றும் நிழலாடும்.. ஒ அப்டியாண்ணன்.... என்று நான் அந்த டீசன்டானவர் இருக்கும் இடத்தை விட்டு நகன்றிருக்கிறேன்..
இவர்களின் தரம் தாழ்ந்த விமர்சனம் ஒரு போதும் எனக்கு ரஜினியின் மேல் உள்ள மதிப்பை குறைக்கவில்லை.. மாறாக.. அப்படி விமர்சிப்பவர்கள் மீதான மரியாதைதான் குறைந்தது.. இதை அந்த அறிவு ஜீவி விமர்சகர்கள் ஒரு போதும் உணரப்போவதில்லை.. . எனக்கு தெரிந்து அடிப்படை கமல் ரசிகர்கள் ஒருபோதும் ரஜினியை கீழ்த்தரமாய் வசை பாடியதில்லை..
இதோ இந்தியாவின் அத்தனை நடிகர்களையும் பின்னுக்கு தள்ளி என் தலைவன் மட்டுமே முன்னுக்கு செல்கிறான்.. அவமானங்களையும் வசவுகளையும், தூற்றல்கள் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு முன்னேற்றத்தை நோக்கி பயணப்படுவது ரஜினி என்ற மனிதனால் மட்டுமே சாத்தியப்படுத்த முடிகிறது..

சினிமா உலகில் இடம் தெரியாமல்.. தடம் இல்லாமல் தொலைந்து போனவர்களை எல்லாம் ரஜினியோடு ஒப்பிட்டு பேசி இருக்கிறார்கள்...
காலம் மாறிக்கொண்டிருக்கிறது.. மாறாது ஒரு விஷயம்.. ரஜினியின் மவுசு மட்டும்தான்.. இன்றும் ரஜினியை தாழ்த்தி கேவலமாக விமர்சனம் எழுதிக்கொண்டிரிக்கிரார்கள்.. எந்த நடிகரையும் தயவு செய்து ரஜினியோடு ஒப்பிட்டு அந்த நடிகரை சினிமா உலகில் நீர்த்து போகசெய்துவிடாதீர்கள்.. அவர்களும் முன்னேற வேண்டும்..

ரஜினி படங்களை ரஜினிக்காக பார்க்கிறேன்....மற்ற படங்களை சினிமாவாக பார்க்கிறேன்.. அதனால்தானோ என்னவோ என்னால் எந்த வித ஒப்பிடலும் இல்லாமல் எல்லா நடிகர்களையும் ரசிக்க முடிகிறது.. எல்லா நல்ல படங்களையும் மனதார பாராட்ட முடிகிறது தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி ..ரசிகன் ரஜினிக்கு மட்டும்.. மற்றபடி கதை, சினிமா எல்லாம் என் பொழுதுபோக்கிற்காக....
புது இடம், புதிய நண்பர்கள் என்று புதியதாய் நிறைய விஷயங்கள் மாறிக்கொண்டே வந்திருக்கிறது.. மாறாத ஒரே விஷயம் அன்று முதல் ( அய்யனார் காப்பி விளம்பர படத்திலிருந்து ) இன்று வரை என்னை வசீகரிக்கும் ரஜினியின் பாட்ஷா – 2 ரிலீசுக்கு முந்திய அட்டைப்படம் வரை ..
…ரஜினி ரஜினி ரஜினி மட்டுமே

Thursday, September 30, 2010

எந்திரன்... என் முதல் பார்வையில்..

எந்த வித ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஆரம்பிக்கும் இந்த படத்தின் அறிமுக காட்சி.. கண்டிப்பாய் ரஜினி ரசிகர்களுக்கானதில்லை.. படத்தின் பெயர் ஆரம்பிக்கும்போதே ரோபோவின் உருவாக்கம் என்று படம் பயணிக்கும் திசையே வேறு... இத்தனை ஆண்டு கால தமிழ் சினிமா வரலாற்றில் திரையரங்கு வாசலில் சூடன் கொளுத்தி, பூசணிக்காய் உடைத்து, பாலபிசேகம் பண்ணிவிட்டு, ஆர்ப்பாட்டத்தோடு, பரபரப்பான ஆர்ப்பரிப்போடு திரையரங்கினுள் நுழையும் ரசிகர்களுக்கு முதன் முறையாக அவர்களின் எதிர்பார்ப்பையும் மீறி..ஒரு இயக்குனரின் கனவை நிறைவேற்றுவதற்க்காக எந்த வித நிர்பந்தமும் இன்றி ரஜினி.. வேறு பாதையில்.. மூன்று முகங்களில்.. விஞ்ஞானி, சிட்டி ரோபோ..வில்லன் ரோபோ..

ஆரம்பம்தான் அப்படி... போக போக சிட்டி ரோபோவின் களேபரங்களில் திரையரங்கில் அனைத்து தரப்பு ரசிகர்களிடம் இருந்து வரும் கரவொலிகள அடங்க வெகு நேரம் பிடிக்கிறது..இந்த படம் முழுவதும் வியாபித்திருக்கும்.. காட்சி.. காட்சி அமைப்பு.. கதாப்பாத்திரம்.. அத்தனையும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கண்டிப்பாய் முற்றிலும் புதியது...

என்னவோ தெரியல.. ஒரு குழந்தையை போல்.. சொன்ன வேலையை செய்து கொண்டு.. சுத்தமாய் பொய் சொல்லியே பழகாத..எதார்த்தமாய் பதில் சொல்லும் சிட்டி ரஜினி மனதில் அப்படியே பதிந்து போகிறார்.. இன்னும் சில நேரம் இந்த சிட்டி ரோபோவுக்கான காட்சிகள் நீண்டிருக்க கூடாதா என்று ஏங்காத மனங்கள் ஒரு சில மட்டுமே இருக்கக்கூடும்

தன் படைப்பான சிட்டி ரோபோ பதில் சொல்லும் அழகை பார்த்து மெய்சிலிர்ப்பது.. அது செய்யும் அசகாய சாகசங்களை மிகுந்த உற்சாகத்தோடு மீடியா முன் பகிர்ந்து கொள்ளும்போது..இதே சிட்டியின் தவறை கண்டு சீறும்போது, இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.. விஞ்ஞானி ரஜினி அவ்வளவு நேர்த்தி..

என்னை பொறுத்த மட்டில் இந்த எந்திரன் இயக்குனர் ஷங்கரின் புது முயற்சி..

எனக்குள் இருக்கும் சினிமா ரசிகனுக்கு இந்த புதிய மனிதனின் வரவு ஒரு பொக்கிஷம்..

புதிய மனிதா ..

MY HEARTY WELCOME TO YOU..

Tuesday, September 14, 2010

அண்ணன் ராமராஜனும் கிடுகிடுத்த பாராளுமன்றமும்

முதன் முறையாக திருசெந்தூர் தொகுதியில் எம்பியாக வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்ற எங்க ஆருயிர் அண்ணன் ராமராஜன் அவர்களை பற்றிய ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு..ஒவ்வொரு முறை அண்ணன் பாராளுமன்றம் செல்லும்போதெல்லாம் யாரையும் எந்த குறைகளும் சொல்லாமல்.. நாட்டு நடப்பு பற்றி பேசாமல் ( தெரிஞ்சாதானே பேசுவதற்கு )அமைதியாகத்தான் போய் வந்தார்..சிக்கனமா இருக்கும்போது சில்லறை கொட்டினாலே மனசு தாங்காது சிறுத்தை வந்து கொட்டினா... இவரது பேச்சு சிக்கனத்தை சீண்டும் விதமாக இவரை பற்றி சிறிது சிறிதாக எதிர்கட்சி எகத்தாளம் செய்ய ஆரம்பித்தன.. கோபத்தில் கண் சிவக்க ஆரம்பித்தாலும்.. ஆடு மாடுகளிடமே உடல் பலத்தை காட்டாமல் பாட்டு திறனால் அடி பணிய வைத்தவர்.. கேவலம் இந்த ஆறறிவு ஜீவனையா அடித்து பந்தாடப்போகிறார்?.. மெதுவாக சிந்தித்தார்.. இந்த முறை விடக்கூடாது என்று மட்டும் அடி மனதில் கர்ஜித்துக்கொண்டார்..

அடுத்த பாராளுமன்ற கூட்டம்.. சாதாரண எடுப்புக்கே துடுப்பு இருக்கும் இக்காலத்தில் இவருக்கு மட்டும் ஒரு துடுப்பு இல்லாமலா போகும்..இவருக்கு மிக அருகில் இவரை உசுப்பேற்றும் விதமாக அந்த துடுப்பு உட்கார்ந்து கொண்டிருந்தது..கூட்டத்தில் இவரை எக்காளம் செய்த எதிரிகட்சிக்காரர்..( அப்பொழுது அண்ணனின் எதிர்கட்சிதான் தமிழகத்தை ஆட்சி செய்துகொண்டிருந்தது).. தமிழ்நாட்டில் syllabus மாற்றியமைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை வைத்தார்.. உடனே அண்ணனுக்கு அருகில் இருந்த துடுப்பு இதுதான் சமயம் என்று அண்ணனில் இடுப்பில் மத்தளம் வாசிக்க வேகமாய் துடித்தெழுந்த அண்ணன் கூறினார்.. நான் இதை ஆட்சேபிக்கிறேன்..எதிர்க்கட்சிக்காரர் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார்.. தமிழ்நாட்டில் சில பஸ்ஸில் மட்டும் அல்ல பல பஸ்ஸில் பிரச்சினை உள்ளது என்பதனை ஆணித்தரமாகா கூறிக்கொள்கிறேன் என்றமர்ந்தபோது .. இவருக்கு பக்கத்தில் இருந்த துடுப்பை அடுப்புக்கு அருகில் வைத்தாற்போல் அப்படி வியர்த்திருந்தார்.. ( இந்த அளவுக்கா .........ம ஒருத்தன் இருப்பான்? )..அண்ணன் கம்பீரமாகத்தான் இருந்தார்..துடுப்புக்குதான் இன்றுவரை வியர்த்துக்கொட்டுவது நிற்கவில்லை..

Tuesday, May 11, 2010

சுண்டலா.. கொக்கா.. பதம் பார்த்த பந்து வீச்சு..

சுண்டல் குமார்.. ரொம்ப கோவக்காரன், படிக்க சொல்லும்போது மட்டும்...
இவன்தான் என்னோட தளபதி.. பால் பண்ணை, ரேஷன் கடையில இருந்து பலசரக்கு கடை வரை எனக்கு பதிலா லைன்ல துணிச்சலா நிக்கிற ஒரே ஆள்.. கிரிகெட் விளையாடும்போதும் என் அணியில்தான் இருப்பான்..

அவன் அடிக்கடி சொல்ற லைன் இதுதான்.. "" ராமு என்ன ஆனாலும் பார்த்துக்கலாம். எவன் கேட்பான்.சங்கூதிருவோம்ல "" ..

எங்கள் அணியில் ஏற்பட்ட பெரிய உட்பூசல் காரணமா.. அணி ரெண்டா பிரிஞ்சிது.. எதிரணிக்கு என்னோட பரம எதிரி வக்கார் வெங்கடேஷ் கேப்டன்.. இந்த ஒரே காரணத்துக்காக என்னோட அணிக்கு என்னை கேப்டனா நியமிச்சாங்க.. இது கிட்டதட்ட பலப்பரீட்சை மாதிரி.. ஜெயிக்கலனா.. மானம் போயிடும்.. பிளஸ்.. ஸ்கூல் பூரா சொல்லி காட்டுவானுங்க.. டீசென்சி பார்க்காம கக்கூஸ்ல கரிய வச்சி எழுதுவானுங்க..இதுல இருந்து தப்பிக்கணும்னா கண்டிப்பா ஜெயிச்சாக வேண்டிய கட்டாயம்..

நாங்க டாஸ் வின் பண்ணி பஸ்ட் பேட்டிங்.. அதிரடியான ஆட்டம்..சுண்டல் கடைசி ஆளா களம் இறங்கி விக்கெட் கீப்பர் தலைக்கு மேல பந்த தூக்கி அடிச்சி..கிடைச்ச பௌண்டரியோட கூட்டினா.. கிடைச்ச ஸ்கோர் பத்து ஓவர்ல 83 ரன்..

ஜெயிப்போம்ன்ற நம்பிக்கையில களம் இறங்கினோம்.. முதல் 5 ஓவரிலேயே எதிரணியின் முக்கிய விக்கெட்டுகள் விழுந்துவிட்டது.. வக்கார் விக்கெட் உள்பட.. அதுவும் என்னோட ஓவர்ல.. சின்னதா அடிதடி.. வார்த்தை பிரயோகம்..எல்லாம் முடிஞ்சி.. மறுபடி ஆட்டம் ஆரம்பமாச்சு ..

ஆட்டத்தின் கடைசி இரண்டு ஓவர் பாக்கி..33 ரன் எடுக்கணும்.. கேப்டன்னாலே..கொஞ்சம் மாத்தி யோசிக்கனும் அப்டின்ற ஒரு மமதை எனக்கு தலைக்கேரிச்சி.. ஒரு கேப்டனுக்கே உரிய திமிர்ல ஓரமா மர நிழலுல வெயில் அப்புறம் கிரிக்கெட் பந்து ரெண்டுமே தன்மேல படக்கூடாதுன்ற சிரத்தையில நின்னுட்டிருந்த என் தளபதி சுண்டல பந்து வீச கூப்பிட்டேன்..

ரிசல்ட் தெரியிரதுக்கு முன்ன என் அணி வீரர்களும் என்னோட முடிவ கைதட்டி வரவேற்றார்கள்.. அப்டிதான் அவனுங்கள அவமானப்படுத்தனும் என்று கொக்கரிக்க.. என்னோட முடிவு மேல எனக்கு பல மடங்கு நம்பிக்கை கூடிச்சி..

சுண்டல் வீசிய முதல் பந்து ஒரு short பிட்ச் பந்து.. அசால்டாக பௌண்டரி கடந்தது.. மறுபடியும் அதே ஷாட் பிட்ச் பால்.. இந்த முறை பௌண்டரிக்கு மேல்.. ஆம் சிக்ஸர்..மூன்றாவது பந்தும் சிக்சருக்கு பறக்க.. இனிமேல் இவன விட்டா வேலைக்காகாதுன்னு. இவன பேபி ஓவர் ஆக்கிடலாம்னு போனா.. சுண்டல் கொதிப்புலையும், கோபத்துலையும் இருந்தான்.. சொல் பேச்சும் கேட்க மாட்டேனுட்டான்.. “” விடு ராமு, அவனுக்கு சங்கூதிட்டுதான்””( 3 பந்துல பாடைய கட்டிட்ட..அது ஒண்ணுதான் பாக்கி..) மறுவேலை..

அடுத்த பந்தை வீசினான்.. அதுவும் சிக்சர்.. அப்புறம் இவன் கேட்ட கேட்டுக்கு 2 வொயிடு பால் வேற.. கடைசி ரெண்டு பந்தில் இன்னும் 2 ரன் குடுத்து எப்டியோ ஓவர முடிச்சிட்டான்..மீதம் ஒரு ரன் எடுக்கணும்.. ஒரு ஓவர் இருக்கு.. கைப்புள்ள கூட அடிப்பான்..இவிங்க அடிக்க மாட்டாங்களா.. ஜெயிச்சிட்டாங்க..

கடைசி வரைக்கும் அவன் எனக்கு தளபதியா இருந்து ஒரே ஓவர்ல என்னை இளையதளபதி ஆக்கிட்டான்..சுண்டல் அடிக்கடி சொல்ற வாக்கியத்தின் முடிவு பகுதி எனக்குள்ள சத்தமா ஒலிச்சுது..

"" சங்கு ஊதிருவோம்ல ""..

Friday, April 30, 2010

சுறா.. எனது பார்வையில்..



எப்போவெல்லாம்.. மொக்கை தமிழ் படங்கள் அழிஞ்சி நல்ல தமிழ் படங்கள் வர ஆரம்பிக்குதோ.. அப்போல்லாம் நான் அவதரிப்பேன்..

___ சுறா விஜய் ____


நாங்க அஞ்சு பேரு எங்களுக்கு பயம் கிடையாது.. விமர்சனம் கூட படிக்காம இன்னிக்கு சுறா பார்க்க போனோம்..

டைடிலின்போது வரும் காட்சிகள் சூப்பர் ரகம்.. அதை பார்க்கும்போது கண்டிப்பா இது விஜயின் பழைய பட பாணியில் இருந்து சற்று வித்தியாசமாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் மாட்டுசானத்தை அடித்தது விஜயின் அறிமுகக்காட்சி.. சுறா போன்று அவர் டைவடித்து டைவடித்து வரும் காட்சியை பார்த்து அதுவரை ஆக்ரோசமாக கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணிக்கொண்டிருந்த விஜயின் 23 ரசிகர்களும் கப்சிப்.. தியேட்டரில் வெடிச்சிரிப்பு ஏற்படுத்திய காட்சியும் இதுவாகத்தானிருக்கும்..
கதை பெருசா இருக்க வேணாம்.. இங்க சிறுசா கூட இல்லிங்கோ.. விஜய் ஒரு மீனவ குப்பத்தில் இருக்கிறார்.. குப்பத்து மக்கள் குடிசை வீட்டை மண் வீடாக மாற்றிவிட்டுதான் திருமணம் என்று அடம்பிடிக்கிறார்.. இந்த லட்சிய பயணம் ஆரம்பிக்கும் முன்பே ஒரு பெண்ணை பார்த்து காதலிக்க ஆரம்பித்து விடுகிறார்.. ஒரு வேலை லட்சியம் முடியரப்போ பொண்ணு கிடைக்காதுன்ற பயமோ என்னவோ..
ஒரு சில பாடல் காட்சிகளில் .. அவரது நடன அசைவுகள் அட சொல்ல வைக்கிறது.. ஆக்சன் காட்சிகளில் அவரது வசன உச்சரிப்பு.. மாடுலேஷன்... முகபாவனை.. எல்லாம் இவரது பழைய படங்களில் இருப்பது போலவே இருப்பதால்.. நமக்கு உற்சாகத்தை விட சலிப்பையே தருகிறது..

இவர ஊரோட சர்தார்ஜி ரேஞ்சுக்கு கிண்டல் பண்ணிக்கொண்டிருக்கும்போது.. படத்தில் ஒரு காட்சியில் இவர் விஜய தி ராஜேந்தரை கலாயத்திருப்பது.. அடங்கொப்புரானே.. விஜய் கிண்டல் பண்ணி சிரிப்பதற்கும் ஒரு ஆள் இருப்பதை நினைத்து சந்தோஷம் வருகிறது..

பில்டப் வசனங்கள் விஜயின் மற்ற படங்களை விட இதில் ரொம்ப அதிகம்.. பட்.. அதற்காக ஒரு ஊரே இவர் பின்னால் எப்போ பார்த்தாலும் சும்மனாச்சுக்கும் போவதெல்லாம்.. ரொம்ப ஓவருங்கண்ணா..
ஒரு காட்சியில்.. விஜயை பார்த்து அந்த ஊரு கலெக்டர் சொல்லுவார்.. அவன பார்த்தீங்களா எப்போ வேணாலும் வெடிக்கிற எரிமலை மாதிரி இருக்கான்னு.. இது வெறும் சாம்பிள் தாங்க இது மாதிரி நிறைய இருக்கு படம் பூரா..

அப்புறம் அந்த ஊரில் இருக்கும் சிறியவர் பெரியவர் எல்லோரையும் இவர அவன் இவன் முட்டாப்பசங்களா.. என்று திட்டுவதெல்லாம்.. கொஞ்சம் ஓவர்தான்.. விஜய் அந்த ஊரு மக்களை பார்த்து கொஞ்சமாவது யோசிங்க என்பார்.. ( யோசிக்கிற அளவுக்கு அவங்களுக்கு அறிவு இருந்தா உங்க பின்னாடி ஏன் சார் வராங்க.. இத நீங்க யோசிங்க )

திரைக்கதையில் இருக்கும் சில ட்விஸ்ட் மசாலா பட பிரியர்களுக்கு கொஞ்சம் லாஜிக்கோடு குடுத்தமைக்காக இயக்குனரை பாராட்டலாம்..

சீக்கிரமே விஜய தமிழகத்துக்கு முதல்வர் ஆக்குங்க.. அதுக்கும் மேல ஆசைப்பட்டார்ணா.. தயவு செய்து பிரதமரா ஆக்குங்க.. மத்தபடி இவர் சினிமாவில் இருந்து தப்பிக்க நமக்கு வேற வழியே கிடையாது.. சொல்ல மறந்துட்டேன்.. அதுக்கு முன்ன அவர் அப்பாவ கவர்னர் ஆக்கிடுங்க..

தமிழன் ரெண்டு பேரு ஒரே இடத்துல இருந்தா ஒருத்தன் பேச்சை ஒருத்தன் கேட்க மாட்டான்.. இங்க ஒரு ஊரே இவரு பேச்சை கேக்குது..இது படத்துல இருக்கிற ஒரு மிகப்பெரிய டச்சிங் சீன்

கடைசி வரை இவர் மீன் பிடிக்க கடலுக்கு போகல.. ரெண்டு வாட்டி போவாரு..அது கூட தமன்னாவ பிடிக்க.. மீன் பிடிக்க இல்ல
ஆளில்லாத கடையில் டி ஆத்துற மாதிரி.. வலையை மட்டும் அடிக்கடி பின்னிட்டிருக்கிறார்..

ஹீரோயின் தமன்னாவை பற்றி.. அது வழக்கம்போல இந்த படத்துலயும் ஒரு அரலூசா வருது..

சுறா
.. " அவனல்லாம் அப்டியே போக விட்ரனும்.. ஏன்னா அவனுக்கு பயம் கிடையாது..

“”” BE CAREFUL...”” நான் என்னை சொன்னேன்....

Wednesday, April 28, 2010

அருகங்குளம் டப்பீஸ்

கிராமப்புறத்த மையமா வச்சி வர்ற எல்லா படத்துலயும் ஒரு கேரக்டர் எதுக்கு வருதுன்னே தெரியாத அளவுக்கு வந்துட்டு போகும்.. அது மாதிரிதான் இந்த டப்பீசும்..

இவனுக்கு அப்பா அம்மா வச்ச பேரு என்னன்னு யாருக்கும் தெரியாது.. எங்க ஊர்காரங்க வச்ச பேரு டப்பீஸ்.. எனக்கு சின்ன வயசா இருக்கும்போது, ரொம்ப வித்யாசமா இருக்கானேன்னு.. நான் எங்க அண்ணன்லாம்..இவன கல்லகொண்டு எரிஞ்சி விளையாடிருக்கோம்.. கல்லால் அடிக்கும்போது சுரணை இல்லாத மாதிரி இருந்தான்னா.. கிட்ட போயி அவன் கையில வச்சிருக்கிற கம்ப உருவி அவன அடிப்போம்.. எல்லார் வீட்டுலயும் சாப்பாடு வாங்கி சாப்பிடுற காரணத்தால் . அவன் எங்களோட சேட்டையை பொறுத்துதான் ஆகணும்..அவனுக்கு வலிக்குன்றதே எனக்கு பல வருசமா தெரியாது.. பெரியவங்கள்ள இருந்து சின்னவங்க வரை எல்லாரும் அவன வாடா போடான்னுதான் பேசுவாங்க.. ஒரே ஒரு காரணம். அவனுக்குன்னு வீடு, சொந்த பந்தம் எதுவும் கிடையாது...
வயல் வேலையில இருந்து வீட்டு வேலை வரை எல்லா வேலையும் வெறும் சாப்பாட்டுக்காக செய்வான்..வேலைக்கு கூலின்னா என்னன்னே தெரியாது அவனுக்கு..
எல்லாத்துக்கும் மேல எங்க ஊரு wireman கூட அவனுக்கு வேலை குடுத்தான்.. இருட்டுற சமயத்துல எல்லா மின் விளக்குகளுக்கும FUSE போடுற வேலை..அதே மாதிரி விடியற்காலையில FUSE எடுத்து விடனும்.. எல்லா வேலையும் தெரிஞ்ச உண்மையான உழைப்பாளி.. ஆனா அந்த ஊருக்கே இவன் கோமாளி..

சிந்திச்சி செயல்படல.. கேள்வி கேட்கலேன்னா.. நாம எல்லாருமே டப்பீஸ் மாதிரியான வாழ்க்கை வாழுரததான் அர்த்தம்..

Thursday, March 18, 2010

உரக்க சிரித்த நித்தி….

நேரம் இரவு 11 மணி

ரஞ்சிதா: என்ன பண்றது சுவாமி?

நித்தி: ஒன்னும் பண்ண வேண்டாம்.. ஒரு வீடியோவ மறைக்க நான் ஒம்போது வீடியோ அனுப்பிட்டு இருக்கேன். இது போதாதா..கொஞ்ச நாளுல எல்லாம் அடங்கிரும்.. அப்புறம் ஒரு நல்ல நாளா பார்த்து..நான் சந்நியாசி இல்ல.. சம்சாரின்னு சொல்லி ஒட்டு மொத்தமா எல்லாத்தையும் ஒரே அமுக்கா அமுக்கிடலாம்..

ரஞ்சிதா: எப்டி நம்ம விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது சுவாமி??. பின்னாடி பார்த்துக்கலாம்னு நீங்களே எடுத்தீங்களா??

நித்தி: அப்டிலாம்.. இல்ல கண்ணு.. காத்து வர்றதுக்காக லேசா கதவை திறந்து
வச்சேன்.. காத்தோட சேர்ந்து இந்த கொள்ளிக்கருப்பன் உள்ள நுழைஞ்சிருக்கான்.. அத கவனிக்காம..நான் சமாதி நிலைக்கு போயிட்டேன்.. இனி ரூம்ல fan , AC . எது ஒடலைனாலும் கதவு மட்டும் இல்ல ஜன்னல கூட திறக்க தொறக்கமாட்டேன்..

ரஞ்சிதா: இப்போ அந்த கொள்ளிக்கருப்பன என்ன பண்றது சுவாமி??..

நித்தி: நமக்கு கல்யாணம்னு அவனுக்கு தகவல் குடுத்தா மட்டும் போதும்.... குறைஞ்சது நாலைஞ்சி நாளைக்கு கவர் பண்ணுவான்.. வீடியோ செலவு மிச்சம்.. ( என்னா டெக்னிக்கா எடுக்கான்யா ! )நீயும்தான் தமிழ் சினிமால எவ்வளவோ ஹீரோ கூட ஆடி பாடுன.. என் கூட நடிச்சப்போ கிடைச்ச புப்ளிசிட்டி வேற எந்த படத்துலயாவது கிடைச்சிதா.. இல்ல இதுக்க்முன்ன எந்த நாயாவது உன் பேட்டிக்காக உன் வீட்டு வாசலுக்கு வந்துதா.. இப்போ பாரு உன் பொறவாசல்ல கூட ஆளுங்க நிக்காங்க உன் பேட்டிக்காக..

ரஞ்சிதா: உண்மைதான் சுவாமி.. உங்களுக்குதான் சாமி நன்றி சொல்லணும்..

நித்தி: அடி பயவுள்ள போற போக்க பார்த்தா மனோரமா இயர் புக் வரைக்கும் போய்டுவ போல..

ரஞ்சிதா: எப்டி சொல்றீங்க சுவாமி?

நித்தி: நித்தியானந்தவுடன் வீடியோவில் இருந்த நடிகை யாருன்னு ஒரு கேள்வி எழுப்பிரமாட்டாங்க...அப்போ மக்களோட பொது அறிவு வரைக்கும் போயிருவல்ல ..எஹீ..ஹா... ஹா.. ஹா.. ஹா..

ரஞ்சிதா: உரக்க சிரிக்காதீர்கள் சுவாமி.. வாயில கேமரா வச்சிர போறாங்க………

(உரையாடல் தொடரும்... )