Tuesday, September 14, 2010

அண்ணன் ராமராஜனும் கிடுகிடுத்த பாராளுமன்றமும்

முதன் முறையாக திருசெந்தூர் தொகுதியில் எம்பியாக வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்ற எங்க ஆருயிர் அண்ணன் ராமராஜன் அவர்களை பற்றிய ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு..ஒவ்வொரு முறை அண்ணன் பாராளுமன்றம் செல்லும்போதெல்லாம் யாரையும் எந்த குறைகளும் சொல்லாமல்.. நாட்டு நடப்பு பற்றி பேசாமல் ( தெரிஞ்சாதானே பேசுவதற்கு )அமைதியாகத்தான் போய் வந்தார்..சிக்கனமா இருக்கும்போது சில்லறை கொட்டினாலே மனசு தாங்காது சிறுத்தை வந்து கொட்டினா... இவரது பேச்சு சிக்கனத்தை சீண்டும் விதமாக இவரை பற்றி சிறிது சிறிதாக எதிர்கட்சி எகத்தாளம் செய்ய ஆரம்பித்தன.. கோபத்தில் கண் சிவக்க ஆரம்பித்தாலும்.. ஆடு மாடுகளிடமே உடல் பலத்தை காட்டாமல் பாட்டு திறனால் அடி பணிய வைத்தவர்.. கேவலம் இந்த ஆறறிவு ஜீவனையா அடித்து பந்தாடப்போகிறார்?.. மெதுவாக சிந்தித்தார்.. இந்த முறை விடக்கூடாது என்று மட்டும் அடி மனதில் கர்ஜித்துக்கொண்டார்..

அடுத்த பாராளுமன்ற கூட்டம்.. சாதாரண எடுப்புக்கே துடுப்பு இருக்கும் இக்காலத்தில் இவருக்கு மட்டும் ஒரு துடுப்பு இல்லாமலா போகும்..இவருக்கு மிக அருகில் இவரை உசுப்பேற்றும் விதமாக அந்த துடுப்பு உட்கார்ந்து கொண்டிருந்தது..கூட்டத்தில் இவரை எக்காளம் செய்த எதிரிகட்சிக்காரர்..( அப்பொழுது அண்ணனின் எதிர்கட்சிதான் தமிழகத்தை ஆட்சி செய்துகொண்டிருந்தது).. தமிழ்நாட்டில் syllabus மாற்றியமைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை வைத்தார்.. உடனே அண்ணனுக்கு அருகில் இருந்த துடுப்பு இதுதான் சமயம் என்று அண்ணனில் இடுப்பில் மத்தளம் வாசிக்க வேகமாய் துடித்தெழுந்த அண்ணன் கூறினார்.. நான் இதை ஆட்சேபிக்கிறேன்..எதிர்க்கட்சிக்காரர் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார்.. தமிழ்நாட்டில் சில பஸ்ஸில் மட்டும் அல்ல பல பஸ்ஸில் பிரச்சினை உள்ளது என்பதனை ஆணித்தரமாகா கூறிக்கொள்கிறேன் என்றமர்ந்தபோது .. இவருக்கு பக்கத்தில் இருந்த துடுப்பை அடுப்புக்கு அருகில் வைத்தாற்போல் அப்படி வியர்த்திருந்தார்.. ( இந்த அளவுக்கா .........ம ஒருத்தன் இருப்பான்? )..அண்ணன் கம்பீரமாகத்தான் இருந்தார்..துடுப்புக்குதான் இன்றுவரை வியர்த்துக்கொட்டுவது நிற்கவில்லை..

11 comments:

Anonymous said...

இதையே இப்போ அழகிரி இப்படிதான் பேசினார்னு சொல்லிப் பாருங்களேன்.

Anonymous said...

is it true or just a PJ

பஹ்ரைன் பாபா said...

"" Anonymous said...
இதையே இப்போ அழகிரி இப்படிதான் பேசினார்னு சொல்லிப் பாருங்களேன்.""

வருகைக்கு நன்றி..

R.Gopi said...

யப்பா ராம்........

பார்த்து ரொம்ப நாளாச்சேன்னு நெனச்சேன்... இப்படி லேட்டா வந்தாலும், அதிரடியா வந்திருக்கியேப்பா...

அந்த சிலபஸ் பல பஸ் ஆன கதைங்கறது இது தான்... யப்பாடி யப்பா... நானும் பல பஸ் பார்த்து இருக்கேன். ஆனா, அண்ணன் டவுசர் பாண்டி வாயால அந்த விளக்கம் கேட்டதும் தான் நான் தெளிஞ்சேன்...

பேச்சி பேச்சி பெருமையுள்ள பேச்சி
பேச்சி பேச்சி நீ அருமையுள்ள பேச்சி

Chitra said...

கண் கலங்க வச்சுட்டீங்க..... ஹா,ஹா,ஹா,ஹா...

எறும்பு said...

அடிக்கடி எழுதுங்க அண்ணே.. நீங்க பதிவு போடுவீங்க போடுவீங்கன்னு எதிர்பார்த்து என் கண்ணே பூத்து போச்சு.

எறும்பு said...

உங்க வாசகர்களை ஏங்க வைக்காதிங்க அண்ணே.

பஹ்ரைன் பாபா said...

" carthickeyan said...
is it true or just a PJ "

Its left upto the readers.

பஹ்ரைன் பாபா said...

" Chitra said...
கண் கலங்க வச்சுட்டீங்க..... ஹா,ஹா,ஹா,ஹா... "

தொடர் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி..

பஹ்ரைன் பாபா said...

" எறும்பு said...
அடிக்கடி எழுதுங்க அண்ணே.."
அடிக்கடி எழுதுற அளவுக்கு நான் உங்க அளவுக்கு பெரிய பதிவர் இல்லைங்க..
" நீங்க பதிவு போடுவீங்க போடுவீங்கன்னு எதிர்பார்த்து என் கண்ணே பூத்து போச்சு. "
என்னைய வச்சி ஒன்னும் காமெடி கீமெடி பண்ணலியே..

பஹ்ரைன் பாபா said...

" யப்பா ராம்........"

சொல்லுங்க தல

"பார்த்து ரொம்ப நாளாச்சேன்னு நெனச்சேன்... இப்படி லேட்டா வந்தாலும், அதிரடியா வந்திருக்கியேப்பா..."

அப்படியா.. மிக்க நன்றி வருகைக்கும் சேர்த்து .. நல்ல மூடுல இருக்கீங்கன்னு நினைக்கிறேன்.. .

"அந்த சிலபஸ் பல பஸ் ஆன கதைங்கறது இது தான்... யப்பாடி யப்பா... நானும் பல பஸ் பார்த்து இருக்கேன். ஆனா, அண்ணன் டவுசர் பாண்டி வாயால அந்த விளக்கம் கேட்டதும் தான் நான் தெளிஞ்சேன்..."

எல்லா விசயமும் அண்ணனே வந்து தெளிவு படுத்த முடியுமா..?

"பேச்சி பேச்சி பெருமையுள்ள பேச்சி
பேச்சி பேச்சி நீ அருமையுள்ள பேச்சி"

இது எப்டி உங்களுக்கு தெரியும் .. இத அண்ணன் டவுசர் பாக்கெட்டில பத்திரமாத்தான் வச்சிருந்தார்.. திருடிட்டீங்களா..?

Post a Comment