Tuesday, May 11, 2010

சுண்டலா.. கொக்கா.. பதம் பார்த்த பந்து வீச்சு..

சுண்டல் குமார்.. ரொம்ப கோவக்காரன், படிக்க சொல்லும்போது மட்டும்...
இவன்தான் என்னோட தளபதி.. பால் பண்ணை, ரேஷன் கடையில இருந்து பலசரக்கு கடை வரை எனக்கு பதிலா லைன்ல துணிச்சலா நிக்கிற ஒரே ஆள்.. கிரிகெட் விளையாடும்போதும் என் அணியில்தான் இருப்பான்..

அவன் அடிக்கடி சொல்ற லைன் இதுதான்.. "" ராமு என்ன ஆனாலும் பார்த்துக்கலாம். எவன் கேட்பான்.சங்கூதிருவோம்ல "" ..

எங்கள் அணியில் ஏற்பட்ட பெரிய உட்பூசல் காரணமா.. அணி ரெண்டா பிரிஞ்சிது.. எதிரணிக்கு என்னோட பரம எதிரி வக்கார் வெங்கடேஷ் கேப்டன்.. இந்த ஒரே காரணத்துக்காக என்னோட அணிக்கு என்னை கேப்டனா நியமிச்சாங்க.. இது கிட்டதட்ட பலப்பரீட்சை மாதிரி.. ஜெயிக்கலனா.. மானம் போயிடும்.. பிளஸ்.. ஸ்கூல் பூரா சொல்லி காட்டுவானுங்க.. டீசென்சி பார்க்காம கக்கூஸ்ல கரிய வச்சி எழுதுவானுங்க..இதுல இருந்து தப்பிக்கணும்னா கண்டிப்பா ஜெயிச்சாக வேண்டிய கட்டாயம்..

நாங்க டாஸ் வின் பண்ணி பஸ்ட் பேட்டிங்.. அதிரடியான ஆட்டம்..சுண்டல் கடைசி ஆளா களம் இறங்கி விக்கெட் கீப்பர் தலைக்கு மேல பந்த தூக்கி அடிச்சி..கிடைச்ச பௌண்டரியோட கூட்டினா.. கிடைச்ச ஸ்கோர் பத்து ஓவர்ல 83 ரன்..

ஜெயிப்போம்ன்ற நம்பிக்கையில களம் இறங்கினோம்.. முதல் 5 ஓவரிலேயே எதிரணியின் முக்கிய விக்கெட்டுகள் விழுந்துவிட்டது.. வக்கார் விக்கெட் உள்பட.. அதுவும் என்னோட ஓவர்ல.. சின்னதா அடிதடி.. வார்த்தை பிரயோகம்..எல்லாம் முடிஞ்சி.. மறுபடி ஆட்டம் ஆரம்பமாச்சு ..

ஆட்டத்தின் கடைசி இரண்டு ஓவர் பாக்கி..33 ரன் எடுக்கணும்.. கேப்டன்னாலே..கொஞ்சம் மாத்தி யோசிக்கனும் அப்டின்ற ஒரு மமதை எனக்கு தலைக்கேரிச்சி.. ஒரு கேப்டனுக்கே உரிய திமிர்ல ஓரமா மர நிழலுல வெயில் அப்புறம் கிரிக்கெட் பந்து ரெண்டுமே தன்மேல படக்கூடாதுன்ற சிரத்தையில நின்னுட்டிருந்த என் தளபதி சுண்டல பந்து வீச கூப்பிட்டேன்..

ரிசல்ட் தெரியிரதுக்கு முன்ன என் அணி வீரர்களும் என்னோட முடிவ கைதட்டி வரவேற்றார்கள்.. அப்டிதான் அவனுங்கள அவமானப்படுத்தனும் என்று கொக்கரிக்க.. என்னோட முடிவு மேல எனக்கு பல மடங்கு நம்பிக்கை கூடிச்சி..

சுண்டல் வீசிய முதல் பந்து ஒரு short பிட்ச் பந்து.. அசால்டாக பௌண்டரி கடந்தது.. மறுபடியும் அதே ஷாட் பிட்ச் பால்.. இந்த முறை பௌண்டரிக்கு மேல்.. ஆம் சிக்ஸர்..மூன்றாவது பந்தும் சிக்சருக்கு பறக்க.. இனிமேல் இவன விட்டா வேலைக்காகாதுன்னு. இவன பேபி ஓவர் ஆக்கிடலாம்னு போனா.. சுண்டல் கொதிப்புலையும், கோபத்துலையும் இருந்தான்.. சொல் பேச்சும் கேட்க மாட்டேனுட்டான்.. “” விடு ராமு, அவனுக்கு சங்கூதிட்டுதான்””( 3 பந்துல பாடைய கட்டிட்ட..அது ஒண்ணுதான் பாக்கி..) மறுவேலை..

அடுத்த பந்தை வீசினான்.. அதுவும் சிக்சர்.. அப்புறம் இவன் கேட்ட கேட்டுக்கு 2 வொயிடு பால் வேற.. கடைசி ரெண்டு பந்தில் இன்னும் 2 ரன் குடுத்து எப்டியோ ஓவர முடிச்சிட்டான்..மீதம் ஒரு ரன் எடுக்கணும்.. ஒரு ஓவர் இருக்கு.. கைப்புள்ள கூட அடிப்பான்..இவிங்க அடிக்க மாட்டாங்களா.. ஜெயிச்சிட்டாங்க..

கடைசி வரைக்கும் அவன் எனக்கு தளபதியா இருந்து ஒரே ஓவர்ல என்னை இளையதளபதி ஆக்கிட்டான்..சுண்டல் அடிக்கடி சொல்ற வாக்கியத்தின் முடிவு பகுதி எனக்குள்ள சத்தமா ஒலிச்சுது..

"" சங்கு ஊதிருவோம்ல ""..

3 comments:

Chitra said...

கடைசி வரைக்கும் அவன் எனக்கு தளபதியா இருந்து ஒரே ஓவர்ல என்னை இளையதளபதி ஆக்கிட்டான்..சுண்டல் அடிக்கடி சொல்ற வாக்கியத்தின் முடிவு பகுதி எனக்குள்ள சத்தமா ஒலிச்சுது..

"" சங்கு ஊதிருவோம்ல "".


....ha,ha,ha,ha,ha.... good one.

goma said...

கிரிக்கெட்டில் இல்லாத வார்த்தைகள் எல்லாம் சும்மா சகட்டு மேனிக்கு சிக்சராவும் ஃபோராவும் பெளண்ட்ரியைத் தாண்டி விழுதே.....

R.Gopi said...

தல

கிரிக்கெட்னா உங்களுக்கு அம்புட்டு பிடிக்குமா?

அடிக்கறது எல்லாம் சிக்ஸர்,ஃபோரா இருக்கேன்னு கேட்டேன்...

நல்லா ஊதினீங்க போங்க சங்கு...

Post a Comment