Thursday, March 11, 2010

மழை நேர மாலை பொழுது

மெலிதாய் சாரல்
குடைக்குள்
இருந்தும்
ஈரமாகும் மேனி..
முழுதாய் நனையலாம்
வேண்டாம் இன்னொரு
குடை....

நிசப்த இருளில்
நிழலாய் நீ
எதிரில் நான்...

அடை மழை
நிழற்குடையில்
நீ
மட்டும்
தனியாய்..

தொலைதூரமாய்
ஒரு இரவுப்பயணம்
ஓட்டுனராய் நான்..
சமமாய் நீ
உனக்கான
முன்னிருக்கையில்
உறங்கா விழியுடன்..

ரசனையாய் ஒரு கவிதை
இல்லை இல்லை

என் ரசனையே
கவிதையாய்..

தொடரும்
இல்லை
முற்றுப்பெறும்
பின்னூட்டத்தை பொறுத்து……

14 comments:

Chitra said...

என் ரசனையே
கவிதையாய்..

.......... சும்மா சொல்ல கூடாது. ...... உங்க ரசனை - ஆங் .... - கவிதை நல்லா இருக்கு. continue ..... continue மக்கா!

goma said...

தொடரும்
இல்லை
முற்றுப்பெறும்....பின்னூட்டத்தை பொறுத்து

இது உங்கள் முடிவு.

தொடரும்
இல்லை
முற்றுப்பெறும்....பெய்யும் மழையைப் பொறுத்து

இது என் பேனா தந்த முடிவு

பஹ்ரைன் பாபா said...

" தொடரும்
இல்லை
முற்றுப்பெறும்....பெய்யும் மழையைப் பொறுத்து

இது என் பேனா தந்த முடிவு "

புரியலிங்க... என் தலை பல்பு டக்குன்னு எரியிரதிள்ள..

பஹ்ரைன் பாபா said...

""" Chitra said...
என் ரசனையே
கவிதையாய்..

.......... சும்மா சொல்ல கூடாது. ...... உங்க ரசனை - ஆங் .... - கவிதை நல்லா இருக்கு. continue ..... continue மக்கா ""

என்னை வச்சி ஒன்னும் கா.. கீ.. பண்ணலியே..

goma said...

புரியலிங்க... என் தலை பல்பு டக்குன்னு எரியிரதிள்ள..

அடடா!!!
மழைபெய்தால் கவிதை தொடரும்,மழைவிட்டால் கவிதைக் குடையும் மடங்கி விடும்.....

இதுக்கு மேலே எனக்கு விளக்க முடியாதுங்க....

பஹ்ரைன் பாபா said...

""" goma said...

அடடா!!!
மழைபெய்தால் கவிதை தொடரும்,மழைவிட்டால் கவிதைக் குடையும் மடங்கி விடும்.... """.

IT's VERY CLEAR NOW..

"" இதுக்கு மேலே எனக்கு விளக்க முடியாதுங்க.... ""

இந்த விளக்கமே.. ஜாஸ்திங்க.. நன்றி..

goma said...

ஜாஸ்திங்க.. நன்றி..

அப்படீங்களா.....அப்போ வார்த்தைகளை இன்னும் சுருக்கியிருப்பேனே....

வார்த்தைகளையும் தண்ணீர் போல செலவளிக்கணும்

பஹ்ரைன் பாபா said...

"" goma said...
ஜாஸ்திங்க.. நன்றி..

அப்படீங்களா.....அப்போ வார்த்தைகளை இன்னும் சுருக்கியிருப்பேனே...."""

அர்த்தம் சுருங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்..நான் முன்னமே சொன்ன மாதிரி..நம்ம தலை பல்பு டைம் எடுத்துதான் எரியும்


"" வார்த்தைகளையும் தண்ணீர் போல செலவளிக்கணும்""

மெட்ராஸ் தண்ணிதானே..உண்மைதான்.. சென்னை வாசியாக இருந்தால்...

கடைசி வரை கவிதைய பத்தி ஒரு வரி கூட போடலியே..

R.Gopi said...

தலைவா

ரொம்பா நாளா ஒரு கவிதை எழுதணும்னு சொல்லிட்டு இருந்தீங்களே...

எப்போ எழுத போறீங்க??

Anonymous said...

Very nice one.

Anonymous said...

A very nice one

பஹ்ரைன் பாபா said...

"" March 12, 2010 1:16 AM
R.Gopi said...
தலைவா

ரொம்பா நாளா ஒரு கவிதை எழுதணும்னு சொல்லிட்டு இருந்தீங்களே...

எப்போ எழுத போறீங்க?? """


என்ன நக்கலுங்க உங்களுக்கு.. எழுதியாச்சு பதிவா போட்டாச்சு.. .இதுக்குதான் கடைசி வரில நானே எனக்கு செக் வச்சிருக்கேன்.. நான் எழுதியது கவிதையே இல்லை என்று உண்மையை பட்டவர்த்தனமாய் கூறிய உங்களுக்கு மிக்க நன்றி.
இன்னொரு தபா கவிதை போட்டேன்னா.. நானே உங்களுக்கு தகவல் சொல்லி அனுப்புறேன் சார்.

R.Gopi said...

//பஹ்ரைன் பாபா said...
"" March 12, 2010 1:16 AM
R.Gopi said...
தலைவா

ரொம்பா நாளா ஒரு கவிதை எழுதணும்னு சொல்லிட்டு இருந்தீங்களே...

எப்போ எழுத போறீங்க?? """


என்ன நக்கலுங்க உங்களுக்கு.. எழுதியாச்சு பதிவா போட்டாச்சு.. .இதுக்குதான் கடைசி வரில நானே எனக்கு செக் வச்சிருக்கேன்.. நான் எழுதியது கவிதையே இல்லை என்று உண்மையை பட்டவர்த்தனமாய் கூறிய உங்களுக்கு மிக்க நன்றி.
இன்னொரு தபா கவிதை போட்டேன்னா.. நானே உங்களுக்கு தகவல் சொல்லி அனுப்புறேன் சார்.//

********

கோபம் வேண்டாம் “தல”...

நான் இதை கவிதை இல்லை என்று சொல்லவில்லை
ஆனால், கவிதையாக இருந்திருந்தால், நன்றாக இருந்திருக்கும் என்று சொல்ல வந்தேன்...

நெக்ஸ்ட் மீட் பண்றேன்...

goma said...

கவிதையைப் பத்தி சொல்லணுமா?

இரைச்சலான அமைதியில்,வேகமான நத்தை வண்டியில்,அடுத்த வீட்டுக்கு தொடங்கிய நெடும் பயணம் போல்
ஓஹோன்னு இருக்கு.....

Post a Comment