Tuesday, March 9, 2010

முதல் பாவம்..

அம்பாசமுத்திரம்..

எனக்கு அப்போ 11 வயசு இருக்கும்.. ஸ்கூல் முடிச்சி நேரா எங்க அப்பாவோட கடைக்குதான் போவேன்.. வேற எதுக்கு..சாக்லேட், பிஸ்கட் சாப்ட்றதுக்குதான்.. 11 வயசுல நான் என்ன கடைய நிர்வாகமா பண்ண முடியும் .. எங்க அண்ணனும் அப்போ கடையில ப்ரெசென்ட்.. கொஞ்ச நேரம் கழிச்சி நைசா என்கிட்டே சொன்னான்.. சத்தம் போடாம கிளம்பு.. நாம ஒரு முக்கியமான ஒருத்தர பார்க்க போறோம்..சின்ன வயசு..எத எடுத்தாலும் ஆர்வம்.. யோசிக்காம கிளம்பினேன்..நடந் போயிட்டே இருக்கும்போது சொன்னான்.. இன்னிக்கு வீட்டுக்கு நைட் லேட் ஆதான் போக முடியும்நு இன்னொரு பீடிகை போட்டான்.. எனக்கு ஒன்னும் புரியல..ஏதோ ஒரு நினைப்புல.. அவன்கூட நடந்திட்டு இருந்தேன்..

கொஞ்ச நேரம் கழிச்சி பார்த்தா.. ஒரு நூறு பேருக்கு மேல ஒரு மேடை பக்கம் கூட்டமா நிக்குறாங்க.. ஏதோ கட்சி மீட்டிங்.. எங்க அண்ணன் அதுக்கு மேல நடக்கல..அங்கேயே நின்னுட்டு இருந்தான்.. என்னடா இவன் முக்கியமான ஆள்னு சொல்லிட்டு.. இங்க வந்து நிக்கிறான்.. ஒரு வேலை அப்பா அந்த பக்கமா வந்து பயந்து நிக்குரான்னு நினைச்சி சுத்தி பார்த்தா யாரும் இல்ல..

ஒன்னு முக்கியமான ஆள காட்டு.. இல்லைனா வீட்டுக்கு கிளம்புறேன்.. அதே நேரம் மேடையில் இருந்து அறிவிப்பு..

பிரபல தமிழ் நடிகர் ராமராஜன் அவர்கள் இன்னும் 20 தே நிமிடத்தில் உங்கள் முன் தோன்றுவார்னு.. எனக்கு புரிஞ்சிரிச்சி.. அந்த நேரம் ராமராஜன் கிட்ட தட்ட அறிவிக்கப்படாத சூப்பர் ஸ்டாரா தமிழ் சினிமாவுல வலம் வந்த நேரம்.. எனக்கும் சந்தோஷம்.. அவங்க சொல்லி ஒரு 45 நிமிஷம் கழிச்சி. மேடையில் ராமராஜன்..

பார்த்திட்டேன்.. பார்த்திட்டேன்..

இவர்தாங்க நான் நேரில் பார்த்த முதல் சினிமா கதாநாயகன்.. எவ்வளவோ வளர்பிறை நடிகர் தமிழ் ல இன்னும் நடிச்சிட்டு இருக்க..நான் ஏன் இவர முதல் முதலா நேர்ல பார்க்கணும்..

தலைப்ப மறுபடி படிங்க..

என் வாழ்க்கை நல்லா போயிட்டிருக்கும்போதே திடீர்னு சறுக்கல் ஏற்பட்டா எனக்கு இந்த நிகழ்ச்சி தான் ஞாபகத்துக்கு வரும்..

11 comments:

ஆடுமாடு said...

எங்க ஊர் பஸ்ஸ்டாண்டுல, பையன்ங்கலாம் நின்னுட்டிருந்தோம்.

ராமராஜன் வருவாரு, வருவாருன்னு சொல்லிட்டே இருந்த கட்சிக்காரங்க ரெண்டு பேரை தவிர, வேற யாருமே பொறுமை இல்லாமா வீட்டுக்குப் போயிட்டாங்க. ஊருதான் ஒன்பது மணிக்கே தூங்கிருமே.

அவரு வரும்போது நாங்க நாலஞ்சு பேருதான் நின்னோம். இறங்கி கைய கொடுத்துட்டு, அம்பாசமுத்ரத்துல மீட்டிங், கிளம்பட்டுமான்னார்.

நான் சொல்றதும் நீங்க பார்த்ததும் ஒரே நேரமா இருக்கும்னு நினைக்கிறேன்.
என்ன சொல்றீங்க?

பஹ்ரைன் பாபா said...

""" 1 comments:
ஆடுமாடு said...
எங்க ஊர் பஸ்ஸ்டாண்டுல, பையன்ங்கலாம் நின்னுட்டிருந்தோம்.

ராமராஜன் வருவாரு, வருவாருன்னு சொல்லிட்டே இருந்த கட்சிக்காரங்க ரெண்டு பேரை தவிர, வேற யாருமே பொறுமை இல்லாமா வீட்டுக்குப் போயிட்டாங்க. ஊருதான் ஒன்பது மணிக்கே தூங்கிருமே.

அவரு வரும்போது நாங்க நாலஞ்சு பேருதான் நின்னோம். இறங்கி கைய கொடுத்துட்டு, அம்பாசமுத்ரத்துல மீட்டிங், கிளம்பட்டுமான்னார். ""

ஹா.. ஹா..சாதாரண உரைநடையில நகைச்சுவை யா தெளிக்கிரீங்களே தல.. ஆமா நீங்க எந்த ஊரு??.
தங்கள் முதல் வருகைக்கு நன்றி..

"""" நான் சொல்றதும் நீங்க பார்த்ததும் ஒரே நேரமா இருக்கும்னு நினைக்கிறேன்.
என்ன சொல்றீங்க? """

Correctdhaan....SAME BLOOD..

R.Gopi said...

ராமராஜன் மக்கள் மனதில் இன்னமும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்... அங்கு அவர் “கிராமராஜன்”....

அவர் விஸ்வரூபம் எடுக்கும் நாள் வந்தது... எடுத்தார்... அதுவே “மேதை” என்ற பெயரில் வளர்ந்து வருகிறது...

ஆடு, மாடுகளின் மேல் பாரதிராஜாவை விட பாசம் வைத்தவர் அண்ணன் ராமராஜன்... எல்லார் வீட்டுலயும், நாமா கறந்தா தான் பசு பால் கொடுக்கும்... ஆனா, அண்ணன் ராமராஜன் பசு கிட்ட போய் சொம்ப நீட்டினாலே, பால் கொட்டும்...

மொத்தத்தில் ராமராஜனை தரிசனம் செய்ததில், உங்கள் புண்ணிய கணக்கு ஆரம்பமாகி விட்டது..

Chitra said...

முதல் பாவம் - ராமராஜ ஆனந்தாவாக இருந்திருந்தால்.
இவர் பசு நேசன் ஆச்சே!

எறும்பு said...

ஏலே ஆடு மாடுக்கு நம்மூரு பக்கத்துல உள்ள ஆம்பூருதாம்லே... அண்ணாச்சி எழுத படிச்சு பாரு..

எறும்பு said...

ஆனால் சினிமாவின் ஈடு இணையற்ற நடிகனை பார்த்தது பாவம் என்று சொன்னதை கண்டிக்கிறேன்..
:)

பஹ்ரைன் பாபா said...

" எறும்பு said...
ஏலே ஆடு மாடுக்கு நம்மூரு பக்கத்துல உள்ள ஆம்பூருதாம்லே... அண்ணாச்சி எழுத படிச்சு பாரு.. "

அண்ணன் உலக நாயகன் அண்ணன் !!!!
வந்துட்டீங்களா??.. நல்லா சொன்ணீங்கன்னேன்.. கண்டிப்பா அண்ணாச்சி எழுத்த படிச்சிருவோம்.. அப்புறம் கேப்டன் அடிக்கடி வந்து போங்க.

பஹ்ரைன் பாபா said...

"" R.Gopi said... "....

அவர் விஸ்வரூபம் எடுக்கும் நாள் வந்தது... எடுத்தார்... அதுவே “மேதை” என்ற பெயரில் வளர்ந்து வருகிறது...""""

அவர வச்சி ஒன்னும் காமெடி கீமெடி பண்ணலியே??

""2 நாமா கறந்தா தான் பசு பால் கொடுக்கும்... ஆனா, அண்ணன் ராமராஜன் பசு கிட்ட போய் சொம்ப நீட்டினாலே, பால் கொட்டும்...""

அப்டி போட்டு தாக்குங்க..இதுக்கு நான் பரவா இல்லிங்கோ..

மொத்தத்தில் ராமராஜனை தரிசனம் செய்ததில், உங்கள் புண்ணிய கணக்கு ஆரம்பமாகி விட்டது..

""" என்ன வரிங்க.. பிச்சிட்டிங்க.. ரொம்ப நாளா இருந்த உறுத்தல் இப்போ போச்சிங்க.. இதுக்குதான் மனசுல என்ன இருந்தாலும் பதிவா போட்டுடனும்ன்றது.."""

பஹ்ரைன் பாபா said...

""" Chitra said...
முதல் பாவம் - ராமராஜ ஆனந்தாவாக இருந்திருந்தால் """


ஏங்க.. நான் பாவத்த பத்தி பேசினா.. நீங்க மகா பாவத்த பத்தி பேசுறீங்க..

பஹ்ரைன் பாபா said...

""" எறும்பு said...
ஆனால் சினிமாவின் ஈடு இணையற்ற நடிகனை பார்த்தது பாவம் என்று சொன்னதை கண்டிக்கிறேன்..
:) """..

சினிமாவின் ஈடு இணையற்ற நடிகனை ??..

CUT.. CUT.. CUT..

இது ராமராஜனுக்கு தெரியுமா??

Tamil said...

Ada paavame ;)

Post a Comment