
எப்போவெல்லாம்.. மொக்கை தமிழ் படங்கள் அழிஞ்சி நல்ல தமிழ் படங்கள் வர ஆரம்பிக்குதோ.. அப்போல்லாம் நான் அவதரிப்பேன்..
___ சுறா விஜய் ____
நாங்க அஞ்சு பேரு எங்களுக்கு பயம் கிடையாது.. விமர்சனம் கூட படிக்காம இன்னிக்கு சுறா பார்க்க போனோம்..
டைடிலின்போது வரும் காட்சிகள் சூப்பர் ரகம்.. அதை பார்க்கும்போது கண்டிப்பா இது விஜயின் பழைய பட பாணியில் இருந்து சற்று வித்தியாசமாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் மாட்டுசானத்தை அடித்தது விஜயின் அறிமுகக்காட்சி.. சுறா போன்று அவர் டைவடித்து டைவடித்து வரும் காட்சியை பார்த்து அதுவரை ஆக்ரோசமாக கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணிக்கொண்டிருந்த விஜயின் 23 ரசிகர்களும் கப்சிப்.. தியேட்டரில் வெடிச்சிரிப்பு ஏற்படுத்திய காட்சியும் இதுவாகத்தானிருக்கும்..
கதை பெருசா இருக்க வேணாம்.. இங்க சிறுசா கூட இல்லிங்கோ.. விஜய் ஒரு மீனவ குப்பத்தில் இருக்கிறார்.. குப்பத்து மக்கள் குடிசை வீட்டை மண் வீடாக மாற்றிவிட்டுதான் திருமணம் என்று அடம்பிடிக்கிறார்.. இந்த லட்சிய பயணம் ஆரம்பிக்கும் முன்பே ஒரு பெண்ணை பார்த்து காதலிக்க ஆரம்பித்து விடுகிறார்.. ஒரு வேலை லட்சியம் முடியரப்போ பொண்ணு கிடைக்காதுன்ற பயமோ என்னவோ..
ஒரு சில பாடல் காட்சிகளில் .. அவரது நடன அசைவுகள் அட சொல்ல வைக்கிறது.. ஆக்சன் காட்சிகளில் அவரது வசன உச்சரிப்பு.. மாடுலேஷன்... முகபாவனை.. எல்லாம் இவரது பழைய படங்களில் இருப்பது போலவே இருப்பதால்.. நமக்கு உற்சாகத்தை விட சலிப்பையே தருகிறது..
இவர ஊரோட சர்தார்ஜி ரேஞ்சுக்கு கிண்டல் பண்ணிக்கொண்டிருக்கும்போது.. படத்தில் ஒரு காட்சியில் இவர் விஜய தி ராஜேந்தரை கலாயத்திருப்பது.. அடங்கொப்புரானே.. விஜய் கிண்டல் பண்ணி சிரிப்பதற்கும் ஒரு ஆள் இருப்பதை நினைத்து சந்தோஷம் வருகிறது..
பில்டப் வசனங்கள் விஜயின் மற்ற படங்களை விட இதில் ரொம்ப அதிகம்.. பட்.. அதற்காக ஒரு ஊரே இவர் பின்னால் எப்போ பார்த்தாலும் சும்மனாச்சுக்கும் போவதெல்லாம்.. ரொம்ப ஓவருங்கண்ணா..
ஒரு காட்சியில்.. விஜயை பார்த்து அந்த ஊரு கலெக்டர் சொல்லுவார்.. அவன பார்த்தீங்களா எப்போ வேணாலும் வெடிக்கிற எரிமலை மாதிரி இருக்கான்னு.. இது வெறும் சாம்பிள் தாங்க இது மாதிரி நிறைய இருக்கு படம் பூரா..
அப்புறம் அந்த ஊரில் இருக்கும் சிறியவர் பெரியவர் எல்லோரையும் இவர அவன் இவன் முட்டாப்பசங்களா.. என்று திட்டுவதெல்லாம்.. கொஞ்சம் ஓவர்தான்.. விஜய் அந்த ஊரு மக்களை பார்த்து கொஞ்சமாவது யோசிங்க என்பார்.. ( யோசிக்கிற அளவுக்கு அவங்களுக்கு அறிவு இருந்தா உங்க பின்னாடி ஏன் சார் வராங்க.. இத நீங்க யோசிங்க )
திரைக்கதையில் இருக்கும் சில ட்விஸ்ட் மசாலா பட பிரியர்களுக்கு கொஞ்சம் லாஜிக்கோடு குடுத்தமைக்காக இயக்குனரை பாராட்டலாம்..
சீக்கிரமே விஜய தமிழகத்துக்கு முதல்வர் ஆக்குங்க.. அதுக்கும் மேல ஆசைப்பட்டார்ணா.. தயவு செய்து பிரதமரா ஆக்குங்க.. மத்தபடி இவர் சினிமாவில் இருந்து தப்பிக்க நமக்கு வேற வழியே கிடையாது.. சொல்ல மறந்துட்டேன்.. அதுக்கு முன்ன அவர் அப்பாவ கவர்னர் ஆக்கிடுங்க..
தமிழன் ரெண்டு பேரு ஒரே இடத்துல இருந்தா ஒருத்தன் பேச்சை ஒருத்தன் கேட்க மாட்டான்.. இங்க ஒரு ஊரே இவரு பேச்சை கேக்குது..இது படத்துல இருக்கிற ஒரு மிகப்பெரிய டச்சிங் சீன்
கடைசி வரை இவர் மீன் பிடிக்க கடலுக்கு போகல.. ரெண்டு வாட்டி போவாரு..அது கூட தமன்னாவ பிடிக்க.. மீன் பிடிக்க இல்ல
ஆளில்லாத கடையில் டி ஆத்துற மாதிரி.. வலையை மட்டும் அடிக்கடி பின்னிட்டிருக்கிறார்..
ஹீரோயின் தமன்னாவை பற்றி.. அது வழக்கம்போல இந்த படத்துலயும் ஒரு அரலூசா வருது..
சுறா
.. " அவனல்லாம் அப்டியே போக விட்ரனும்.. ஏன்னா அவனுக்கு பயம் கிடையாது..
“”” BE CAREFUL...”” நான் என்னை சொன்னேன்....
25 comments:
:-)
Goodo Good
மீனவர்கள் பயணம் தொடரும்
சீக்கிரமே விஜய தமிழகத்துக்கு முதல்வர் ஆக்குங்க.. அதுக்கும் மேல ஆசைப்பட்டார்ணா.. தயவு செய்து பிரதமரா ஆக்குங்க.. மத்தபடி இவர் சினிமாவில் இருந்து தப்பிக்க நமக்கு வேற வழியே கிடையாது.. சொல்ல மறந்துட்டேன்.. அதுக்கு முன்ன அவர் அப்பாவ கவர்னர் ஆக்கிடுங்க.
அதுமட்டும் நடந்த நாங்க கூட ரொம்ப சந்தோசமா இருப்போம். ஆனா அண்ணனுக்கு அங்கயும் bore அடிச்சு திருப்பியும் இந்த மாதிரி ரெண்டெழுத்து படம் எடுத்து ஸ்கூல் பசங்களுக்கு டாகுமெண்டரி மாதிரி போட்டு காமிச்சா ??????? ஐயோ பெருமாளே நீதான் எங்களை காப்பத்தனும்.
ஹலோ கேட்க மறந்திட்டேன் இந்த படத்தில இவருக்கு தங்கச்சிக்கு என்ன கொடுமை நடந்ததுன்னு நீங்க சொல்லவே இல்லையே? ஹிஹிஹி......
உங்கள் வீரத்தினை பாராட்டுகிறேன் தோழர்.
same blood
//சீக்கிரமே விஜய தமிழகத்துக்கு முதல்வர் ஆக்குங்க.. அதுக்கும் மேல ஆசைப்பட்டார்ணா.. தயவு செய்து பிரதமரா ஆக்குங்க.. மத்தபடி இவர் சினிமாவில் இருந்து தப்பிக்க நமக்கு வேற வழியே கிடையாது.. சொல்ல மறந்துட்டேன்.. அதுக்கு முன்ன அவர் அப்பாவ கவர்னர் ஆக்கிடுங்க.. //
//ஹீரோயின் தமன்னாவை பற்றி.. அது வழக்கம்போல இந்த படத்துலயும் ஒரு அரலூசா வருது..//
o my god , ennala siripu adakka mudiyala , aanulum unga anju perkkum romba thaireyam,
dhillapoi parthu irkeengalae !!!
வணக்கம் பாஸ்...
நம்ம ரெண்டு பேரும் வீராச்சாமி பார்த்தோம்... அதை விட இது Better-ஆ? சொல்லுங்க...
நான் இன்னும் சுறா படம் பார்க்க வில்லை... நீங்க சொல்லும் பதிலை வைத்தே பார்க்க திட்டமிட்டு இருக்கிறேன்... :)
என்றும் உங்கள் அருண் பிரசங்கி
"" Dr.P.Kandaswamy said...
Goodo Good ""
Thank You Sir. I welcome you for your first time visit.
"" damildumil said...
மீனவர்கள் பயணம் தொடரும் ""
தங்கள் முதல் வருகைக்கு நன்றி.. தங்களின் பின்னூட்டங்களை என்வழி இணையத்தளத்தில் பார்த்த ஞாபகம்..
"" King Viswa said...
உங்கள் வீரத்தினை பாராட்டுகிறேன் தோழர்.""
வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி, நண்பா..
""" Kolipaiyan said...
same blood
""
WELCOME MR. KOLIPPAIYAN.. SAME BLOOD..
விஜய் இந்த விசயத்துல.. ரசிகன் மத்தவன்னு பாரபட்சமே பார்க்கிறதில்ல..
"" ரோகிணிசிவா said...
முதல் வருகைக்கு நன்றி..
"" o my god , ennala siripu adakka mudiyala ""
- Nice to know that my article made you laugh.-
aanulum unga anju perkkum romba thaireyam,
dhillapoi parthu irkeengalae !!! ""
நாங்க இது வரைக்கும் யாரையும் சினிமால பார்த்து அவ்வளவா பயந்ததில்ல.. இந்த சுறாவ பார்த்து லேசா பயப்பட ஆரம்பிச்சிருக்கோம்..
அருண் பிரசங்கி said...
""
அருண்.. வாங்க..வாங்க..
வீராசாமி மாஸ்டர் பீஸ் அருண்.. சுறா.. வீராசமிய அடையுற வழிமுறையில் வந்த படம்..""
விஜய் 2011ல் அவார்டு படம் நடிப்பார். அது வரைக்கும் பொருத்திருங்கள்.
""" ஷாகுல் said...
விஜய் 2011ல் அவார்டு படம் நடிப்பார். அது வரைக்கும் பொருத்திருங்கள்.
""
அப்ப சுறா அவார்டு படம் இல்லையா??...
தங்களின் முதல் வருகைக்கும்.. நகைச்சுவையான பின்னூட்டத்திற்கும் நன்றி..
சுறா கடிக்கும்ணு தெரிஞ்சும் பாத்த உங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை!....
"""
நேசன்..., said...
சுறா கடிக்கும்ணு தெரிஞ்சும் பாத்த உங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை!....
""
அட நீங்கதான் அந்த நேசனா??.// எப்டி இருக்குறீங்க??.. சுறா கடிக்கும்னு தெரியும்.. ரத்தம் குடிக்கும்ன்றது படம் பார்த்த பின்னாடிதான் தெரியுது..
தங்களின் முதல் வருகைக்கும்.. நன்றி..
maams...ithuvaraikum nee ezhuthina blog la ithuthanda super
//விஜய் கிண்டல் பண்ணி சிரிப்பதற்கும் ஒரு ஆள் இருப்பதை நினைத்து சந்தோஷம் வருகிறது.. //
அல்டிமேட் பாஸ்!
"இனிமே என்ன வெச்சு படம் எடுக்க முன்னாடி ஒரு தடவ இல்ல ரெண்டு தடவ் யோசிங்க, எடுத்துட்டா அப்புறம் யோசிக்க நீங்க இருக்க மாட்டீங்க!"
"" Ramkumar said...
maams...ithuvaraikum nee ezhuthina blog la ithuthanda super ""
வெத்தல பாக்கு வச்சி கூப்டாலும் வர மாட்ட.. இப்போ வந்திருக்கேன்னா .. அதாண்டா சுறாவோட பவர்.. எ டண்டணக்கா..டனக்குனக்கா..
"" பனங்காட்டான் said...
//விஜய் கிண்டல் பண்ணி சிரிப்பதற்கும் ஒரு ஆள் இருப்பதை நினைத்து சந்தோஷம் வருகிறது.. //
அல்டிமேட் பாஸ்!"""
நன்றி.. நன்றி.. நன்றி..
""" Chitra said...
:-)
"""
Chitra
Attendace OK
superrrrrrrrrrrrrrrrrrrr
இந்த படத்துக்கு விமர்சனம் எழுதி ஒரு பதிவை வேஸ்ட் பண்ணிட்டீங்களே தல...
எனக்கு என்னவோ, ரிலீஸாகிற எல்லா படமும் ஒரே மாதிரி தான் இருக்கு... என்ன ஒரு வித்தியாசம்... படத்தோட பேர் தான் வேற...
இதே மாதிரி ரிலீஸான இன்னொரு படத்துல அருண் விஜய்ங்கற ஹீ(ஜீ)ரோ நடிச்சா அந்த படத்துக்கு பேர் “மாஞ்சா வேலு”..
Post a Comment