
ஊமை தேவதை
நீ
மனிதர்களுக்கு மத்தியில்
மனிதத்தை உணர்த்தி விட்டு போன
ஊமை தேவதை
அன்பே கிறிஸ்தவம்
எனவாழ்ந்து காட்டிய
பைபிள்
தொட வெறுக்கும் சமூகத்தையும்
தொட்டு தூக்கிய
உண்மை மருத்துவர்
ஒதுக்கப்பட்ட நோயாளிகளின்
ஒரே அன்னை
இன்றும் எனக்குள்
வாழ்ந்து கொண்டிருக்கும்
ஒரு நிஜக்கவிதை
பிறந்த தினமே
கொண்டாடப்படவேண்டிய
அன்னையர் தினம்
மனிதம் தழைக்க...
அன்பெனும் மந்திரம் ஓயாமல் ஒழிக்க..
மற்றுமோர் பிறவி எடு...
1 comment:
pls chk ur mail
Post a Comment