Thursday, March 4, 2010

" பைப்பை திற.. தண்ணி வரட்டும் " - துண்டு சித்தர்..

நல்ல உயரம்.. வெள்ளை நிறம்.. ஊருக்கு மட்டும் உபதேசம்.. ஒரு வேலை சாப்பாடு.. வாரம் தவறாமல் கோவிலுக்கு போவதுண்டு.. கார்த்திகை அமாவாசை.. மற்றும் எந்த விரத நாட்களையும் விடுவதில்லை.. மாமிசம் சாப்பிடுவதற்கென்று சில நாட்கள்.. மொத்தத்தில்..விரத வாழ்க்கையில் இவரை மிஞ்ச ஆள் இல்லை.. இத்தனைக்கும் நடுவில் அலுவலகம் சென்று.. கணக்கு உத்தியோகம் பார்க்கிறார்.. மிக சாதாரணமாக இருந்த இவர் " துண்டு சித்தர் " என்று அழைக்க பட்டது மிக சமீப காலங்களாகத்தான்..

என்னதான் நல்ல உயரமா இருந்தாலும்..நல்ல சம்பாத்தியம் இருந்தாலும்.. அறைக்குள் இருக்கும்போது.. இவர் உடை என்னவோ 1 ஜான் துண்டுதான்.. சித்தர போன்ற வாழ்க்கை வாழும் இவருடைய உடை வெறும் துண்டாக இருந்ததால்.. துண்டை சித்தரோடு இணைத்து ..துண்டு சித்தர் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார்..

இவர் கூறும் வாழ்க்கை தத்துவம் ஏராளம்.. இவர் நேரம் போகாமல் கிறுக்கிய " பைப்பை திற.. தண்ணி வரட்டும் " நாவல்.. இன்னும் ஓரிரு மாதங்களில் குமுதம் போன்ற உயரிய வார இதழ்களில் பிரசுரமாகும்.. வாசகர்கள் விரும்பி வாங்கி படிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

-- யாரோ --

7 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

" துண்டு சித்தர் "......வாழ்க...


பதிவு அருமை

பஹ்ரைன் பாபா said...

"" உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...
" துண்டு சித்தர் "......வாழ்க...


பதிவு அருமை """



தங்கள் வருகைக்கும், பதிவை பாராட்டியமைக்கும் மிக்க நன்றி...

Anonymous said...

பக்தர்கள் பார்வைக்கு... துண்டு சித்தர் அவரது அறையில் செய்த சல்லாபங்கள் அடங்கிய CD வெகு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது... பக்தர்கள் அனைவரும் பொறுமையாக வரிசையில் நின்று வாங்கி கொள்ளுமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்ள படுகிறார்கள்...

இவன்
விழாக்கமிட்டியாளர்

பஹ்ரைன் பாபா said...

" Anonymous said...
பக்தர்கள் பார்வைக்கு... துண்டு சித்தர் அவரது அறையில் செய்த சல்லாபங்கள் அடங்கிய CD வெகு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது "

பெயரை குறிப்பிட்டே பின்னூட்டம் விடலாமே.. வருகைக்கு நன்றி..

Murugan Narayanasamy said...

உமது உரை நடையில் ஒரு சிறு திருத்தம் மாமிசம் சாப்பிடுவதற்கு என்று சில நாட்கள் என்று எழுதியுள்ளீர்கள் - தங்களின் பணிவான கவனத்திற்கு மாமிசத்தை (non veg) நிறுத்தி பல மாதங்கள் ஆகிறது - இது என்னை நானே தேடும் படலத்தின் அதுத்தகட்ட முயற்சி
படிப்பது சித்தர்கள் & ஞானிகளைப்பற்றி வரலாறு மற்றும் கதைகள் (கவனிக்க - உண்மையான )
பார்ப்பது பட்டினத்தார் / அருணகிரிநாதர் / வள்ளலார் போன்ற திரைப்படங்கள்
செரியால்களில் மிகவும் பிடித்தது ராமாயணமும் மகாபாரதமும்
வாழ்க்கை ஒரு புதிர் போட்டி
நாமெல்லாம் இறைவன் என்ற ச்போன்சொரால் அந்த போட்டிக்கு அனுப்பப்பட்டவர்கள்
இதில் ஒரு சிலர் புதிருக்கு விடை காண்கின்றனர்
மற்றவர்கள் விடை தெரியாமல் போகின்றனர்
ஒரு சிலரோ அவர்களே புதிராக போகின்றனர்
நான் இதில் எந்த ராகம் என்பதை காலம் நிர்ணயிக்கும்
எல்லாம் பிரமை
எல்லாம் மாயா
எல்லாம் சாயா

இப்படிக்கு

நாராயணசாமி முருகன்..

R.Gopi said...

துண்டு சித்தர் அவர்களின் சில சித்து விளையாட்டுகளை பற்றி தெரியப்படுத்தலாமே...

முழு படம் ரிலிஸூக்கு முன் ஒரு ட்ரெய்லர் போல..

மாயா மாயா மாயா மாயா
எல்லாம் மாயா
சாயா சாயா சாயா சாயா
எல்லாம் சாயா....

(சுவாமி பஹ்ரைன் பாபானந்தாவின் சிஷ்யன்)

பஹ்ரைன் பாபா said...

" R.Gopi said...
துண்டு சித்தர் அவர்களின் சில சித்து விளையாட்டுகளை பற்றி தெரியப்படுத்தலாமே..."

தெரிவிக்கலாம்தான்.. முதல்ல பெரிய ஆளாக்குவோம்.. அப்புறம் நம்ம மத்திய அரசு பார்த்துக்கும்..

" முழு படம் ரிலிஸூக்கு முன் ஒரு ட்ரெய்லர் போல..

மாயா மாயா மாயா மாயா
எல்லாம் மாயா
சாயா சாயா சாயா சாயா
எல்லாம் சாயா....

(சுவாமி பஹ்ரைன் பாபானந்தாவின் சிஷ்யன்) "

சந்துல என்னை சாமியாக்குறீன்களே..சாமி குத்தம் ஆயிடபோதுங்க அவர் என் சிஷ்யன் இல்லைங்க.. பழைய நண்பர்.. ரூம் மேட்..

Post a Comment